நம் நாட்டின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், மின் உற்பத்தி, துறைமுகம், விமான நிலையம் உள்பட பல்வேறு துறைகளின் வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அதானி குழுமத்தின் பார்வை உலோக துறை மீது விழுந்துள்ளது, இத்துறையில் வேதாந்தா பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் அதானியின் வருகை பல மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதானி குழுமம் காப்பர் உற்பத்தியில் இறங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் காப்பர் உற்பத்தி குறைவாக உள்ளது இதனால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அப்ப உள்நாட்டில் காப்பர் உற்பத்தி செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்று பக்காவாக கணக்கு போட்டு கௌதம் அதானி காப்பர் உற்பத்தியில் களம் இறங்கியுள்ளார்.
குஜராத் மாநிலம் முந்த்ராவில் அதானி குழுமம் கட்ச் காப்பர் லிமிடெட் என்ற பெயரில் காப்பர் உற்பத்தி ஆலையை நிறுவும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ஆலை தொடக்கத்தில் ஆண்டுக்கு 5,00,000 டன் உற்பத்தி செய்யும் திறனுடன் இருக்கும். 2024 மார்ச் மாதத்தில் ஆலை பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதானியின் கட்ச் காப்பர் லிமிடெட் ஆலை செயல்பட தொடங்கினால் நாட்டின் காப்பர் உற்பத்தி திறன் 80 சதவீதம் அதிகரிக்கும் என்பது நிச்சயம். மேலும் காப்பர் இறக்குமதி கட்டாயம் குறையும்.
அதேசமயம், அடுத்த ஆண்டில் நாட்டின் தாது இறக்குமதி அதிகரிக்கும் மேலும் உலக தாது சப்ளையும் நெருக்கடியை சந்திக்கும். ஏனென்றால், பனாமாவில் ஒரு பெரிய சுரங்கம் அண்மையில் மூடப்பட்டது மற்றும் ஆங்கிலோ அமெரிக்கன் பி.எல்.சி. நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் செயல்பாடுகளில் கடுமையான தடை காரணமாக தாது கிடைப்பதில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அதானியும் தனது ஆலைக்கு தாது இறக்குமதி செய்வார் என்பதால் உலக தாது சப்ளையில் இறுக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024ல் இந்தியாவின் காப்பர் கன்சன்ரேட் இறக்குமதி 20 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதானியின் ஆலை முதல் ஆண்டில் 10 லட்சம் டன் காப்பர் கன்சன்ரேட் பயன்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதானியின் கட்ச் காப்பர் நிறுவனம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் காப்பர் மற்றும் அனில் அகர்வாலின் வேதாந்தா லிமிடெட் ஆகிய சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியாளர்களின் வரிசையில் அதானி நிறுவனம் சேரும்.
தற்போது நாட்டின் மிகப் பெரிய காப்பர் உற்பத்தி நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான முடங்கி கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 4,00,000 டன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தை மீண்டும் தொடங்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications