இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் 2வது இடத்தில் இருக்கும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், சமீப காலமாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், முக்கிய நிறுவனத்தில் இருந்து சேர்மன் பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பதவியிலிருந்து கௌதம் அதானி விலகியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 5 முதல் இப்பதவியில் இருந்து விலக உள்ளதாக பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பதவியில் இருந்து கௌதம் அதானி வெளியேறிய நிலையில், இவர் தொடர்ந்து Non-Executive Chairman ஆக பதிவி வகிப்பார். ஆனால் இந்த பதவியின் கீழ் அவருக்கு நிர்வாக முடிவுகளை எடுக்கும் நேரடி அதிகாரம் இல்லை. இதேபோல் மனிஷ் கேஜ்ரிவால் என்பவரை புதிதாக கூடுதல் நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதானி போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மானிஷ் கேஜ்ரிவாலை மூன்று ஆண்டு காலத்திற்கு கூடுதல் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். மானிஷ் கேஜ்ரிவால் ஒரு தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆவார், இவரது நியமனம் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அதானி போர்ட்ஸ் தற்போது இந்தியாவின் மொத்த சரக்கு போக்குவரத்தில் 27.8 சதவீத பங்கு மற்றும் கண்டெய்னர் சந்தையில் 45.2 சதவீத பங்கைக் கொண்டு பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது நிறுவனத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்த வளர்ச்சி, கௌதம் அதானியின் தலைமையின் கீழ் எட்டிய முக்கிய மைல்கல்.
கௌதம் அதானி தான் அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர், அவரது தலைமையின் கீழ், அதானி குழுமம் உலகளாவிய உள்கட்டமைப்பு சாம்ராஜ்ஜியமாக வளர்ந்துல்ளது. அதானி குழுமம் தற்போது விமான நிலைய நிர்வாகம் முதல் துறைமுக வர்த்தகம் வரையிலும், போக்குவரத்து உள்கட்டமைப்பு மூலம் எனர்ஜி துறைகளில் இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications