அதானியின் கஷ்டகாலம்.. முதல்ல கடத்தல், 2வது 26/11 அட்டாக்.. அப்போ அமெரிக்கா வழக்கு.. தப்புவாரா..?

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, மிகவும் குறைந்த காலகட்டத்தில் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார் என்பது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அவருக்குக் கிடைத்த நட்பும், வாய்ப்புகள் என்றாலும், ஆரம்பக்கட்டத்தில் தனது திறமை மற்றும் விடாமுயற்சியின் விளைவாகவே இந்த உயரிய வட்டத்திற்கு அதானி நுழைந்தார் என்றால் மிகையில்லை.

தற்போது கௌதம் அதானி இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கிறார். அமெரிக்காவின் SEC, FBI, நீதி துறை என அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்து, கௌதம் அதானி வாழ்க்கையை 3வது முறையாகப் புரட்டிப்போட்டு உள்ளது. முதல் இரண்டு முறை தனது உயிருக்கே ஆபத்தான நிலையில், 3வது முறை அமெரிக்க கடுக்குபிடியில் இருந்து தப்புவாரா..?

அதானியின் கஷ்டகாலம்.. முதல்ல கடத்தல், 2வது 26/11 அட்டாக்.. அப்போ அமெரிக்கா வழக்கு.. தப்புவாரா..?

கௌதம் அதானி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு சாதாரண ஜெயின் குடும்பத்தில் பிறந்தார், இளம் வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தி, மும்பையில் வைர வியாபாரத்தில் பணியாற்றத் துவங்கினார்.

1981-ல் அவர் தனது சொந்த ஊரான குஜராத்திற்கு திரும்பி, தனது சகோதரரின் பிளாஸ்டிக் பிளிம் தொழிலை விரிவுபடுத்தினார். அதன் பின்னர், 1988-ல் அதானி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார், முதல் தலைமுறை தொழிலதிபர் ஆனார் கௌதம் அதானி. இந்த நிறுவனம் 1994ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு தற்போது அதானி எண்டர்பிரைசஸ் ஆக மாறி தற்போது அதானி குழுமமாக வளர்ந்து நிற்கிறது.

கௌதம் அதானி ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுகள், உச்ச நீதிமன்ற வழக்கு, செபி தலைவர் மாதபி பூரி பூச் உடனான கூட்டணி தொடர்பான குற்றச்சாட்டுகளை மிகவும் எளிதாகக் கடந்து வந்து தனது வர்த்தகத்தையும், நிறுவனத்தின் மதிப்பையும் தொடர்ந்து உயர்த்தி வந்த நிலையில் இன்று அமெரிக்காவின் அமெரிக்காவின் SEC, FBI, நீதித் துறை தொடுத்துள்ள வழக்குகளில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதாக விஷயமில்லை. இதை அதானி வாழ்க்கையில் 3வது பெரிய விஷயமாகப் பார்க்கும் போது முதல் 2 முறை உயிர் பிழைத்து வந்த கதையைப் பார்க்க வேண்டும்.

கடத்தல் சம்பவம்: 1988 ஆம் ஆண்டு, கௌதம் அதானி தனது வணிகத்தை தொடங்கிய ஆரம்ப காலத்தில், அவர் மற்றும் அவரது சக ஊழியரான சாந்திலால் படேல் உடன் கடத்தப்பட்டனர். அகமதாபாத் கர்னாவதி கிளப்பில் இருந்து காரில் சென்றபோது, அவர்கள் துப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்டு, கடத்தல்காரர்கள் 2 மில்லியன் டாலர் பணத்தை கேட்டனர்.

இந்த கடினமான சூழ்நிலையிலும், கௌதம் அதானி தனது நிதானத்தை இழக்காமல் இருந்தார். அவர் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தன்னை விடுவிக்க முயற்சித்தார். இறுதியில், அவரும் அவரது சக ஊழியரும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம், அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தாஜ் ஹோட்டல் தாக்குதல்: 2008 ஆம் ஆண்டு, மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, கௌதம் அதானி அங்கு இருந்தார். கௌதம் அதானி துபாய் போர்ட் சிஇஓ, நிறுவன ஊழியர்கள், தனது நண்பர்களுடன் தாஜ் ஹோட்டலின் மசாலா கஃபேவில் வர்த்தகக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது தான், தாக்குதல் நடந்தது.

தீவிரவாதிகள் ஹோட்டலில் நுழைந்தபோது, அவர் மற்றும் மற்றவர்களுடன் சமையலறையில் பதுங்கி உயிரை காப்பாற்றிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் அவர் மரணத்திற்கு மிக அருகில் சென்றதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

2 சம்பவங்களின் தாக்கம்: இந்த இரண்டு சம்பவங்களும் கௌதம் அதானியின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இதன் மூலம் தனது வாழ்க்கையில் வரும் எந்தொரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளும் திறனைப் பெற்றார் என்றும் இந்த பேட்டியில் கூறினார். இதை தைரியத்துடன் அமெரிக்காவுக்கு சென்று வழக்கை எதிர்கொள்வாரா கௌதம் அதானி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+