இந்திய FMCG பிரிவில் ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட மளிகைப் பொருட்கள் வரையில் விற்பனை செய்து வரும் அதானி வில்மார் லிமிடெட் நிறுவனத்தின் 43.97% பங்குகளை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம்.
அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டுகளுக்கு பின்பு பல மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதன் ஒரு பகுதியாக கௌதம் அதானி ஆசை ஆசையாக ரிடைல் வர்த்தகக்திற்குள் நுழைய வேண்டும் என்பதற்காக நுழைந்தது தான் அதானி வில்மார் கூட்டணி நிறுவனம்.

இந்நிறுவனத்தில் இருக்கும் மொத்த பங்குகளையும் விற்பனை செய்துவிட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டு உள்ளதால், அதானி குழுமம் பல பன்னாட்டு நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமம் துறைமுக செயல்பாடுகள் முதல் எனர்ஜி துறை வரையில் வர்த்ககம் செய்து வரும் வேளையில், ரீடைல் துறையில் இறங்க வேண்டும் என்ற இலக்குடன் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட வில்மர் இன்டர்நேஷனல் உடன் கூட்டணியில் துவங்கப்பட்ட நிறுவனம் தான் அதானி வில்மார். சிங்கப்பூர் வில்மார் இந்தியாவுக்கு சமையல் எண்ணெய் சப்ளை செய்து அதை அதானி வில்மார் ஃபார்ச்சூன் பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகிறது.
அதானி வில்மார் கூட்டணி நிறுவனத்தில் இரு தரப்பு 43.97% பங்குகளை வைத்திருக்கும் காரணத்தால் நிர்வாக குழுவிலும் சமமான அதிகாரத்தை கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அதானி குழுமம் இக்கூட்டணியில் இருக்கும் 43.97% பங்குகளை விற்பனை செய்வது மூலம் 2.5 - 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை பெற முடியும்.
அதானி குழுமம் பல கடன்களை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வேளையில் இந்த 3 பில்லியன் டாலர் நிதி பல ரீபேமெண்ட்-க்கு பயன்படும் என கௌதம் அதானி நம்புகிறார். இல்லையெனில் அதானி குழுமம் ஆதிக்கம் செய்யும் பிற துறையிலும் முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி வில்மார் பங்குகள் உயர்வுடன் துவங்கினாலும், அடுத்த சில மணிநேரத்தில் 0.47 சதவீதம் சரிந்து 316.20 ரூபாயாக உள்ளது. அதானி வில்மார் பங்குகள் கடந்த 5 வர்த்தக நாளில் 4.79 சதவீதம் சரிந்துள்ளது, இந்த சரிவு பாதை இன்றும் துவங்குவது குறிப்பிட்டத்தக்கது.
இந்திய ரீடைல் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் அதானி வில்மார் பங்குகளை வாங்கினால் இந்திய அளவில் சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் ஆதிக்கம் படைக்க முடியும். ஆனால் வர்த்தக துறையில் எலியும் பூனையுமாக இருக்கும் அம்பானி- அதானி இதற்காக இணைவார்களா..? சமீபத்தில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் Independence பிராண்ட் பிரபலமாக துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications