இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் வேளையிலும், ஹிண்டன்பர்க் விவகாரத்தில் இருந்து மீண்டு வர பல கடன்களை திருப்பி செலுத்தினார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை முழுமையாக முடிக்கவில்லை என்றாலும், இதுவரையில் அதானி குழுமத்திற்கு எதிராக எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் இக்குழுமத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது.

இதன் வாயிலாக கடந்த 6 மாதங்களாக அதிரடியான வர்த்தக விரிவாக்கத்தைச் செய்து வந்த அதானி குழுமம் தற்போது தனது கடனை மறுசீரமைப்பு செய்வதற்காக சுமார் 600 மில்லியன் டாலர், 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுக் கடனை பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதானி டோட்டல் நிறுவனத்தின் ஒரு பிரிவான தம்ரா எல்என்ஜி டெர்மினல் பிரைவேட் லிமிடெட் மூலம் இந்த கடன் திரட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடன வழங்குபவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், யார் கடன் கொடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை 3 முதல் 5 ஆண்டுகள் வரையில் இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் கடனுக்கான வட்டி நிர்ணயம் "Secured Overnight Financing Rate (SOFR)" உடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
துறைமுகம் முதல் மின்சாரம் வரையில் பல துறையில் இயங்கி வரும் அதானி சாம்ராஜ்ஜியம், இந்த கடனை கிரெடிட் அக்ரிகோல், டிபிஎஸ் பேங்க் லிமிடெட், பிஎன்பி பரிபாஸ், மிட்சுபிஷி யுஎப்ஜே ஃபைனான்சியல் குரூப் இன்க் மற்றும் Mizuhoவங்கி லிமிடெட் ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் கடன் ஒப்பந்தத்தை அதானி குழுமம் முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் ஆதானி தலைமையிலான அதானி குழும சாம்ராஜ்ஜியத்தின் முதலும் முக்கியமான நிறுவனமான ஆதானி எண்டர்பிரைசஸ், மார்ச் 31 முடிவடைந்த காலாண்டில் இரண்டு காரணங்களைக் காட்டி நோட்டீஸ்களைப் பெற்றதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் அகமதாபாத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், ஆதானி பவர், ஆதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், ஆதானி வில்மார் மற்றும் ஆதானி டோடல் கேஸ் ஆகிய நிறுவனங்களும் இந்த வாரம் செபி அனுப்பிய நோட்டீஸ்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications