இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி கடந்த இரண்டு வருடமாக வெளிநாட்டில் வர்த்தகம் செய்வதிலும், முதலீடு செய்வதிலும் அதிகப்படியான ஆர்வத்தைக் காட்டி வருகிறார். முதல் கட்டமாக அண்டை நாடுகளுக்கு குறிவைத்த கௌதம் அதானி தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு வலைவீசுகிறார்.
டார்கெட் அமெரிக்கா: அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக டிவிட்டர் பதிவின் வாயிலாக அறிவித்துள்ளார். இந்த முதலீடு அமெரிக்காவின் எனர்ஜி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

கௌதம் அதானி டிவிட்டரில் செய்த பதிவில், முதலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வரும் வேளையில், அதானி குழுமம் தனது உலகளாவிய வர்த்தக நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் 15,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் கௌதம் அதானி இந்த திட்டங்களின் விவரங்கள், எதில் முதலீடு செய்யப்படும், எத்தனை வருடத்தில் முதலீடு செய்யப்படும் போன்ற எவ்விதமான தகவலும் வெளியிடப்படவில்லை. இதேபோல் அமெரிக்க தரப்பில் இருந்தும் இதுவரையில் எவ்விதமான பதிலும் வரவில்லை. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஹிண்டன்பெர்க் ரிசர்ச் இதுகுறித்து விமர்சனம் செய்யுமா..?
டார்கெட் ஐரோப்பா: அதானி குழுமம் ஐரோப்பிய யூனியன், பெல்ஜியம், டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூதர்களை தனது கிரீன் எனர்ஜி உற்பத்தி தளத்தை பார்வையிட ஓரே நேரத்தில் அழைப்பு விடுத்திருந்தது. இந்த 4 தூதர்களும் குஜராத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா உட்பட அதானி குழுமத்தின் பல புதுப்பிக்கத்தக்க எனர்ஜி திட்டங்களை நேரில் பார்வையிட்டனர்.
இதில் முக்கியமாகக் குஜராத்தில் உள்ள காவ்ஹடா-வில் அமைந்துள்ள 30 கிகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காவாக உருவாக உள்ளது. இந்த திட்டம், இந்தியாவில் உலகின் மிகப்பெரிய சோலார் எனர்ஜி பூங்காவாகும், இது அதானி குழுமத்தின் 70 பில்லியன் டாலர் கிரீன் எனர்ஜி முதலீட்டின் ஒரு பகுதியாகும்.
ஐரோப்பிய யூனியன், பெல்ஜியம், டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூதர்கள் குஜராத்தில் இருக்கும் Khavda Renewable Energy Park மற்றும் முத்ரா துறைமுகத்தையும் பார்வையிட்டனர். இந்த சந்திப்பில் அதானி குழுமம் தனது ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் தனது கனவு திட்டத்தை விளக்கி, இத்துறையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிறுவனங்களின் கூட்டணியும், உதவியும் நாடுவதாக கோரிக்கை விடுத்தார்.


Click it and Unblock the Notifications