மும்பை: கௌதம் அதானி வீட்டில் அடுத்தடுத்து குட்நியூஸ் வருவதால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது. கடந்த வாரம் மகன் திருமணம் முடிந்த நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் கௌதம் அதானி மீதும், அதானி குழுமம் மீது அந்நாட்டு நீதித்துறை வழக்கு தொடுத்துள்ள சட்டத்தையே 6 மாதம் பயன்படுத்தவும், அதனை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுக்கவும் தடை விதிக்கும் வகையில் உத்தரவிட்டு உள்ளார். இதனால் அமெரிக்க நீதித்துறையில் பிடியில் இருந்து கௌதம் அதானிக்கு அடுத்த 6 மாதம் விடுதலை.
இந்த நிலையில் கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் அமெரிக்காவின் மயோ கிளினிக்குடன் இணைந்து மும்பை மற்றும் அகமதாபாத் பகுதியில் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது.

அதானி குழுமம் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இரண்டு இடங்களில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ இருக்கிறது. இந்த மருத்துவமனைகள் மும்பை மற்றும் அகமதாபாத் பகுதியில் அமைய இருக்கின்றன என்றும் மயோ கிளினிக்கின் கூட்டணியோடு இந்த மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகள் நிறுவப்படுகின்றன என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கௌதம் அதானி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அதானி ஹெல்த் சிட்டி , மயோ கிளினிக் உடன் இணைந்து உலகத்தரம் வாய்ந்த மருத்துவ ஆராய்ச்சி , மருத்துவ சேவை மற்றும் மருத்துவ கல்வியை வழங்குவதில் பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக நாங்கள் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனைகளை அகமதாபாத் மற்றும் மும்பையில் நிறுவுகிறோம், இந்தியா முழுவதும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான மற்றும் வலுவான இந்தியாவிற்கு நாங்கள் அடித்தளம் இடுகிறோம் என கௌதம் அதானி தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். அதானி குழுமம் இந்த மருத்துவமனைகளை நிறுவுவதற்கு தேவையான அனைத்து வகையான தொழில்நுட்ப ஆதரவையும் மயோ கிளினிக் வழங்கும் என அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இருக்கும் அனைத்து திறப்பு மக்களுக்கும் தேவையான மருத்துவ வசதிகளை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய முழுமையான நோக்கம் என அதானி குழுமம் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதானி ஹெல்த் சிட்டிஸ் என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற மருத்துவமனைகளை நிறுவ வேண்டும் என்பதே கௌதம் அதானியின் திட்டம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மருத்துவ கல்லூரி வளாகங்கள் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக செயல்பட இருக்கின்றன . இது தவிர ஆண்டுக்கு 150 இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கௌதம் அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளுக்கு தன்னுடைய குடும்பத்தினர் மருத்துவர் ரீதியிலான படிப்பு மற்றும் ஆய்வு பணிகளுக்கு 60 ஆயிரம் கோடி வழங்குவதாக அறிவித்தனர். அதன் ஒரு பகுதியாக தான் தற்போது நாங்கள் அதானி ஹெல்த் என்ற பெயரில் இந்த மருத்துவமனைகளை கட்டமைக்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications