கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 24 மணி நேரத்தில் $872 மில்லியன் சரிவு.. ஆனாலும் 4வது இடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி உலகின் 4வது பில்லியனர் என்ற இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதானியின் மூன்றாவது இடத்தினை அமேசானின் ஜெப் பெசோஸ் பிடித்துள்ளார்.

அதானி தன் நிகர சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்தில் இருந்தவர், தற்போது நான்காவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் தினசரி உலகின் பில்லியனர்களின் தரவரிசையினை பட்டியலிட்டு வருகின்றது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் அதானியின் நெட்வொர்த் 872 மில்லியன் குறைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் FPO.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..! அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் FPO.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!

 முதலிடம் யாருக்கு?

முதலிடம் யாருக்கு?

தரவரிசையின் படி, பிரெஞ்சு ஆடம்பர பிராண்டான லூயிஸ் உயிட்டனின் நிறுவனர், பெர்னார்ட் அர்னால்டின் மொத்த சொத்து மதிப்பு 188 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், டெஸ்லாவின் எலான் மஸ்கின் சொத்து மதிப்பானது 145 பில்லியன் டாலராகவும், அமேசானின் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பானது 121 பில்லியனர் டாலராகவும் உள்ளது.

 டாப் 10 பில்லியனர்கள்

டாப் 10 பில்லியனர்கள்

இதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பில்லியனர் ஆன ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின், சொத்து மதிப்பு 84. பில்லியன் டாலராகவும் உள்ளது.

டாப் 10 பில்லியனர்களில் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்டு (188 பில்லியன் டாலர்), எலான் மஸ்க் (145 பில்லியன் டாலர்), ஜெப் பெசோஸ் (121 பில்லியன் டாலர்), கெளதம் அதானி (120 பில்லியன் டாலர்), பில் கேட்ஸ் (111 பில்லியன் டாலர்), வாரன் பஃபெட் (108 பில்லியன் டாலர்), லாரி எலிசன் (99.5 பில்லியன் டாலர்), லாரி பேஜ் (92.3 பில்லியன் டாலர்), செர்ஜி பிரின் (88.7 பில்லியன் டாலர்), ஸ்டீவ் பால்மர் (86.9 பில்லியன் டாலர்)

போர்ப்ஸ் லிஸ்ட்?

போர்ப்ஸ் லிஸ்ட்?

மறுபுறம் போர்ப்ஸ் பில்லியனர் லிஸ்டின் படி தொழிலதிபர் கெளதம் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் பெர்னால்ட் அர்னால்டு முதலிடத்திலும், அவரை தொடர்ந்து எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், கெளதம் அதானி, பில்லியன் முகேஷ் அம்பானி 9வது இடத்திலும் உள்ளனர்.

போர்ப்ஸ் பட்டியலில்?

போர்ப்ஸ் பட்டியலில்?

போர்ப்ஸ் பட்டியலில் முதல் 10 இடங்களில் பெர்னார்ட் அர்னால்டு, எலான் மஸ்க், கெளதம் அதானி, ஜெப் பெசோஸ், லாரி எலிசன், வாரன் பபெட், பில் கேட்ஸ், கார்லோஸ் ஸ்லிம் ஹெலு மற்றும் அவரது குடும்பம், முகேஷ் அம்பானி, லார்ஜி பேஜ்

என்ன செய்கிறார் அதானி?

என்ன செய்கிறார் அதானி?

இந்தியாவின் முன்னணி பணக்காரரான கெளதம் அதானி மின்சார உற்பத்தி, விமான துறை, கப்பல் துறைமுகங்கள், போகுவரத்து, புதுபிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா செண்டர்,என பல சேவைகளையும் வழங்கி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியினை கண்டு வரும் அதானி, தொடர்ந்து பல்வேறு துறைகளில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றார்.

சொத்து மதிப்பு  அதிகரிப்பு

சொத்து மதிப்பு அதிகரிப்பு


ஆக இனி வரும் ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு அதிகரிக்கலாம். குறிப்பாக கொரோனா காலத்தில் பல பில்லியனர்களின் சொத்து மதிப்பானது பெரும் சரிவினைக் கண்ட நிலையில், அதானியின் சொத்து மதிப்பு பெரியளவில் அதிகரித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gautam adani tumble to fourth place on world Rich list:872 million dollar decline in last 24 hours

gautam adani tumble to fourth place on world Rich list:872 million dollar decline in last 24 hours
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X