கவுதம் அதானி கம்பெனிகள் நிலைமை என்னவாகும்? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017 ஆம் ஆண்டு Nathan Anderson என்பவர் Hindenburg Research என்ற தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கினார்.

இந்த நிறுவனம் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல், கிரெடிட், டிரைவேட்டிவ்ஸ் ஆகிய துறைகளில் நிறுவனம் கணக்கியல் முறைகேடுகள், தவறான நிர்வாகம் மற்றும் வெளியிடப்படாத நிதி பரிவர்த்தனைகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட நிதி மோசடிகளைத் தேடி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது.

Hindenburg Research நிறுவனத்தின் டிராக் ரெக்காட்டு பார்த்தால் கௌதம் அதானியின் சொத்து மதிப்புச் சரிவில் இது வெறும் ஆரம்பம் தான் தெரிகிறது.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களே.. இதைக் கொஞ்சம் கேளுங்க..! #பட்ஜெட் 2023 பங்குச்சந்தை முதலீட்டாளர்களே.. இதைக் கொஞ்சம் கேளுங்க..! #பட்ஜெட் 2023

வெளிநாட்டின் SPV நிறுவனங்கள்

வெளிநாட்டின் SPV நிறுவனங்கள்

ஆதானி குழுமம் வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பல நிறுவனங்களைக் கைப்பற்றிய நிலையில் சுமார் 17 வெளிநாட்டின் SPV நிறுவனங்கள் வாயிலாகப் பணத்தை முதலீடு செய்துள்ளது. இதை முறையற்ற வகையில் அதானி குழுமம் பயன்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது Hindenburg Research அறிக்கை.

கடன், பங்கு மதிப்பு

கடன், பங்கு மதிப்பு

இது மட்டும் அல்லாமல் அளவுக்கு அதிகமான கடன், அதிகப்படியான பங்கு மதிப்பு, கணக்கில் முறைகேடுகள் எனப் பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்துள்ளது. இது அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பை கடந்த 2 நாள் வர்த்தகத்தில் 2.3 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாகச் சரிவை ஏற்படுத்தியது.

அதானி சொத்து மதிப்பு

அதானி சொத்து மதிப்பு

இந்த நிலையில் அதானி குழுமத்தின் உரிமையாளரான கௌதம் அதானி சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சரிந்து தற்போது வெறும் 96.6 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த வாரம் 105 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சொத்து மதிப்பு உடன் 3வது இடத்தில் இருந்தார்.

கௌதம் அதானி 7வது இடம்

கௌதம் அதானி 7வது இடம்

கௌதம் அதானி எந்த அளவுக்கு வேகமாக பணக்காரர்கள் பட்டியலில் உயர்ந்தாரோ அதே வேகத்தில் கீழே இறக்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், முதலீட்டாளர்கள் மத்தயில் அதானி குழுமம் அளிக்கும் நம்பிக்கை மூலம் மீண்டும் பங்கு விலை உயரலாம். கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 7 வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார்.

Hindenburg வலை

Hindenburg வலை


Nathan Anderson 2017 ஆம் ஆண்டு Hindenburg நிறுவனத்தைத் துவங்கியது முதல் சுமார் 16 நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டுபிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதில் சமீபத்தில் Hindenburg நிறுவனத்திடம் மாட்டிய நிறுவனம் அமெரிக்காவின் எலக்ட்ரிக் டிரக் தயாரிப்பு நிறுவனமான Nikola Corp. டெஸ்லாவுக்குப் போட்டியாக உருவெடுத்தது.

Nikola Corp வீழ்ச்சி

Nikola Corp வீழ்ச்சி

Nikola Corp சுமார் 34 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக இருந்த நிலையில் இந்நிறுவனம் செய்த முறைகேடுகளை Hindenburg தனது அறிக்கையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நிலையில் தற்போது Nikola வெறும் 1.34 பில்லியன் டாலர் மதிப்புடன் உள்ளது.

6 மாதம்

6 மாதம்

இதுமட்டும் அல்லாமல் தனது தவறுக்காக அமெரிக்காவின் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEC-க்கு பெரும் தொகையை அபராதம் செலுத்தியது Nikola. இப்போது அதானி குழுமத்தின் தரவுகளைக் கடந்த 6 மாதமாக ஆய்வு செய்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gautam Adani wealth crashed; ousted from 100 billion Dollar wealth club after hindenburg report

Gautam Adani wealth crashed; ousted from 100 billion Dollar wealth club after hindenburg report
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X