அதானி குழுமம் என்ற உடனே ஹிண்டன்பர்க் அறிக்கை தான் நம் நினைவுக்கு வரும். அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதானி நிறுவன பங்குகள் பெரும் சரிவை கண்டன.
கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ந்து பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டார். ஆனால் ஓராண்டிலேயே இழந்த சொத்தை மீட்டெடுத்து மீண்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார் கௌதம் அதானி.

அதானியின் சொத்து மதிப்பு: ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி புதன்கிழமை கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் கூடுதலாக 2.7 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளது. இதன் மூலம் இவரின் மொத்த சொத்து மதிப்பு 100.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
ஓராண்டுக்கு பிறகு 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட எலைட் பட்டியலில் மீண்டும் கௌதம் அதானிக்கு இடம் கிடைத்துள்ளது. அதாவது ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு முதன்முறையாக அவரது சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது.
உலக பணக்காரர்களில் 12ஆவது இடம்: தன்னுடைய சொத்து மதிப்பு உயர்ந்ததன் மூலம் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 12ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11ஆவது இடத்தில் இருக்கிறார். அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருவதும் இதற்கு காரணம்.
2023இல் பல பில்லியன்களை இழந்த அதானி: கடந்த 2023ஆம் ஆண்டு அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனால் அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை கண்டன. ஒரு மாதத்திலேயே அதானியின் சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் சரிந்தது. அதானியின் சொத்து மதிப்பு 37.7 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு குறைந்தது.
மீண்டெழுந்தது எப்படி?: ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து பல கட்ட நடவடிக்கைகளை எடுத்த அதானி குழுமம் மெதுவாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றது. கடந்த ஆண்டு ராஜீவ் ஜெயினின் GQG கூட்டாளி அதானி நிறுவனத்தில் 4 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது.
அதை போலவே, கத்தார் முதலீட்டு ஆணையம் 500 மில்லியன் டாலர் மற்றும் டோடல் எனர்ஜிஸ் நிறுவனம் 300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது பெரும் உதவியாக இருந்தது.
இது போக அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சமீபத்தில் சந்தை கட்டுப்பாட்டு இணையமான செபி-க்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது.
இதனால் அதானி நிறுவன பங்குகள் மீண்டும் ஏறுமுகத்திற்கு வந்தன. தற்போதும் இது தொடர்வதால் அதானி நிறுவனத்தின் பங்குகள் உயர்வதோடு கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் உயர்ந்து கொண்டே வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications