உண்மையே வெல்லும்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கெளதம் அதானி ட்வீட்!

அதானி குழுமம் மீது அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டு வந்தன. அதானி குழுமம் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க பற்பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது பெரியளவில் கைகொடுக்கவில்லை எனலாம்.

இப்படி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பும் 60% மேலாக சரிவினைக் கண்டு காணப்பட்டது.

இதற்கிடையில் அதானி குழுமம் இது தொடர்பான இந்த குற்றச்சாட்டினை விசாரிக்க பல பொது நல மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

6 பேர் கொண்ட குழு

6 பேர் கொண்ட குழு

இது குறித்த விசாரணையில் அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கோண்ட குழுவினை உச்ச நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஒரு சரியான குழு தேவை என்பதை உணர்கிறோம். இந்த குழு முன்னாள் நீதிபதி சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறக்கப்பட்டது.

விரைவில் அறிக்கை தாக்கல் செய்யணும்

விரைவில் அறிக்கை தாக்கல் செய்யணும்

இந்த குழுவில் முன்னாள் நீதிபதிகள் ஓபி பட், ஜேபி தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுவர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் உள்ளது. ஆக இந்த குழு இரண்டே மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம் அதானி ட்வீட்

கெளதம் அதானி ட்வீட்


உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிக்கை குறித்து தான் கெளதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டினை பகிர்ந்துள்ளார். அதில் அதானி குழுமம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்பதாகவும், இது ஒரு முடிவினைக் கொண்டு வரும். உண்மையே வெல்லும் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஏராளமானவர்கள் கருத்து?

ஏராளமானவர்கள் கருத்து?

 

இது அதானி குழும முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது எனலாம். இது அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம்.

கெளதம் அதானியினை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கொண்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களும், அதானியின் ட்வீட்டினை பகிர்ந்து வருகின்றனர். பலரும் இது குறித்து தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டு

ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டு


அதானி குழுமம் மீது ஜனவரி 24 அன்று ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது, அதானி குழுமம் மோசடியான பல நடவடிக்கைகள் மூலம் பங்குகளை உயர்த்த கையாண்டதாகவும், குறிப்பாக போலியான நிறுவனங்கள் மூலம் பண பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு என பல மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அளவுக்கு அதிகமான கடனை வாங்கியுள்ளதாகவும், அந்த கடனை திரும்ப செலுத்த அதானி குழுமத்திற்கு தற்போது போதிய நிதி கிடையாது என கூறியது.

அதானி ஆரம்பம் முதலே மறுப்பு

அதானி ஆரம்பம் முதலே மறுப்பு

 

ஆனால் அதானி குழுமமோ ஆரம்பம் தொடங்கி மறுத்து வந்த நிலையில், தற்போதும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் 2 வருடமாக இந்த ஆய்வறிக்கை குறித்து ஆய்வு செய்ததாக கூறிய நிலையில், இது குறித்து தங்களிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று கூறியது.

மொத்தத்தில் எது உண்மை என்பது இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+