அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கெளதம் அதானி தலைமையிலான நிறுவனங்கள், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில் பிப்ரவரி 27ல் இருந்து அவரின் சொத்து மதிப்பானது 17.70 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது அவரை உலகளவில் சிறந்த 20 பில்லியனர்களின் பட்டியலுக்கு அருகில் சென்று கொண்டு சென்றுள்ளது.
66 வயதான பில்லியனரான கெளதம் அதானியின் மதிப்பு 55.40 பில்லியன் டாலர்களாகும். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின் படி 21வது இடத்தில் உள்ளார்.
அதானி பங்குகள் ஏற்றம்
இந்த ஏற்றமானது அதானி குழும பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவற்றில் கூர்மையான ஏற்றத்தின் மத்தியில், அதானியின் நிகர மதிப்பும் ஏற்றம் கண்டுள்ளது.
இது கடந்த பிப்ரவரி 27 அன்று 37.7 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது. இந்த குறைந்தபட்ச அளவில் இருந்து தற்போது, கணிசமான ஏற்றத்தினை கண்டுள்ளது.
5 அமர்வுகளாகவே ஏற்றம்
அதானி குழும பங்குகள் கடந்த சில அமர்வுகளாகவே முதலீட்டாளர்களின் கவலையை போக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. கடந்த 5 அமர்வுகளில் மட்டும் அதானி குழும நிறுவனங்கள் 31% வரையில் ஏற்றம் கண்டுள்ளன. இது அதானி குழும முதலீட்டாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
31% வரையில் ஏற்றம்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனமானது கடந்த 5 அமர்வுகளில் மட்டும் 30.77% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதே அதானி டோட்டல் கேஸ் பங்கின் விலை 28.36% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
இதே அதானி கிரீன் எனர்ஜி பங்கின் விலையானது 21.54% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதே அதானி பவர் நிறுவன பங்கானது 19.32% ஏற்றத்திலும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கானது 21.84% எனும் அளவுக்கும், அதானி வில்மர் பங்கானது 21% எனும் அளவுக்கும், அதானி போர்ட்ஸ் & செஸ் பங்கானது 17% எனும் அளவுக்கும் ஏற்றம் கண்டுள்ளது.
கடன் அடைப்பு
இதே என்.டி.டி.வி, ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கானது கடந்த 5 அமர்வுகளாகவே 22% வரையில் ஏற்றம் கண்டுள்ளது.
இது அதானி குழுமம் பங்கு அடிப்படையிலான 7374 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தியுள்ளது. மீதம் நிலுவையில் இருக்கும் கடன்களையும் அடைக்க திட்டமிட்டுள்ளது.
சந்தை மதிப்பு ஏற்றம்
இதற்கிடையில் அமெரிக்காவின் பிரபல முதலீட்டு நிறுவனமான ஜி கியூ ஜி பார்ட்னர்ஸ் நிறுவனம், 15,446 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினையும் செய்துள்ளது. இதன் காரணமாகவும் அதானி குழும பங்குகள் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் என்பது 150 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
தொடர் சரிவில் பங்கு
கடந்த ஆண்டு செப்டம்பர் அதானி குழுமத்தின் மதிப்பு சுமார் 150 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு இருந்தது. ஆனால் இன்று அதில் பாதி எனும் அளவுக்கு கூட இல்லை. இந்த நிலையில் கூட தொடர்ந்து அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications