அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், இக்குழுமத்தின் நிதி நிலைமை மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்த கவலைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால் இதேவேளையில் இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் சில அதானி நிறுவனப் பங்குகள் உயர்வுடன் முடிந்துள்ளது.
இந்த விவகாரம் மூலம் உலகளாவிய முதலீட்டாளர்கள் அதானி குழும விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதால், அதானி குழுமம் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் இனி வரும் காலத்தில் கடினமாகலாம். அதானி குழுமத்திற்கு போதுமான நிதி ஆதாரம் கிடைக்காவிட்டால் அதன் வர்த்தகம் விரிவாக்கம் முடங்கி, பங்கு மதிப்புகள் குறையத் துவங்கும்.

இதைவிட முக்கியமாக அதானி குழுமம் வாங்கிய கடன்களைத் திருப்பி செலுத்த முடியாமல் மாட்டிக்கொள்ளலாம். இப்படியிருக்கும் போது அதானி குழுமத்தின் மொத்த கடன் எவ்வளவு..? இந்திய வங்கிகள் எவ்வளவு கொடுத்துள்ளது..?
அதானி குழுமத்தின் மொத்த கடன் ரூ.2.4 லட்சம் கோடியாக உள்ளது, இதோடு ரூ.59,791 கோடி பணத்தை ரொக்கமாகக் கையிருப்பு வைத்துள்ளது. இதன் மூலம் நிகர கடன் ரூ.1.81 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம் தற்போது கையில் இருக்கும் பணத்தை வைத்து அடுத்த 30 மாத கடன் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இருந்தாலும், நிறுவனத்தில் இயக்கத்திற்கும், விரிவாக்கத்திற்கும் புதிய கடன்கள் பெறுவதில் கடுமையான சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதானி குழுமத்தின் கடனில் பெரும் பகுதியை இந்திய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் கொடுத்துள்ளது. மொத்த கடனில் சுமாக் 36 சதவீதம் அதாவது ரூ.88,100 கோடியை இந்திய வங்கிகள் கொடுத்துள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகள் 15%, தனியார் வங்கிகள் 4% மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் 18% பங்கை வைத்துள்ளன.
அதானி குழுமத்தின் மொத்த கடனில் சர்வதேச வங்கிகளின் பங்கீடு 26% ஆக உள்ளது, சர்வதேச மூலதன சந்தைகள், பத்திரங்கள் மூலம் 29% பங்கீட்டை கொண்டு பெரிய கடனாளியாக உள்ளன.
அதானி குழுமத்திற்குக் கடன் கொடுத்துள்ள பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவன பங்குகளும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்களின் பங்குகள் 3.5% மற்றும் 1.6% இன்று சரிவடைந்துள்ளது.
அதானி குழுமத்திற்கு எல்ஐசி, எஸ்பிஐ, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், Rural Electrification Corporation போன்றவை கடன் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications