Adani Ports, அதானி-க்கு நேரம் சரியில்லை.. அமெரிக்க கடன் திட்டத்தில் புது டிவிஸ்ட்..!

அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) நிறுவனம் இலங்கையில் உள்ள கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் அமைக்கும் திட்டத்திற்காக அமெரிக்க வளர்ச்சி நிதி நிறுவனத்திடமிருந்து (DFC) 553 மில்லியன் டாலர் கடன் பெற தாக்கல் செய்த விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக முடிவு செய்துள்ளது.

அதற்கு பதிலாக, APSEZ தனது சொந்த வருவாய்கள் மற்றும் மூலதனத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் அமைக்கும் திட்டம் வேகமாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இப்புதிய டெர்மினல் இயங்கத் தொடங்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Adani Ports, அதானி-க்கு நேரம் சரியில்லை.. அமெரிக்க கடன் திட்டத்தில் புது டிவிஸ்ட்..!

அதானி குழுமம் மீது அமெரிக்க SEC, FBI என பல அமைப்புகள் வழக்கு தொடுத்து 2000 கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் லஞ்ச முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நிலையில், இது கௌதம் அதானிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில் அதானி போர்ட் நிறுவனம் அமெரிக்க வளர்ச்சி நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெறும் விண்ணப்பத்தை தன் சொந்த விருப்பத்தின் பெயரில் வெளியேற்றியுள்ளது.

DFC முன்னதாக கொழும்பு துறைமுகத்தில் கண்டெய்னர் முனையத்தின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் இயக்கத்தை ஆதரிக்க கடனை அங்கீகரித்தது. இந்த திட்டத்தை இலங்கை தொழிலதிபர் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீலங்கா போர்ட்ஸ் ஆதாரிட்டி (SLPA) மற்றும் APSEZ ஆகியவை இணைந்து செயல்படுத்துகிறது.

DFC கடன் விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதற்கான காரணங்கள் வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும், APSEZ மாற்று நிதி ஆதாரங்களை கண்டறிந்துள்ளது அல்லது தனது சொந்த நிதியை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோலார் எனர்ஜி வழக்கு:

கௌதம் அதானி அரசு அதிகாரிகளுக்கு 2100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்து மத்திய அரசுக்கு சொந்தமான SEIC நிறுவனத்திடம் 12 கிகாவாட் சோலார் மின்சாரத்தை விற்பனை செய்யும் மாபெரும் திட்டத்தை கைப்பற்றியது அமெரிக்க SEC அமைப்பின் வழக்கு மூலம் தெரிய வந்த நிலையில், இதில் அமெரிக்க நிறுவனமான அசூர் பவர்-க்கு தொடர்பும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அனைத்திற்கும் துவக்கம் சோலார் எனர்ஜி ஒப்பந்தம், மத்திய அரசின் Solar Energy Corporation of India (SECI) 12 கிகாவாட் சோலார் மின்சாரத்தைத் தயாரிக்க முடிவு செய்தது. ஆனால் மத்திய அரசு சோலார் மின்சார உற்பத்தியில் நேரடியாக இறங்காமல் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதற்காக டென்டர் விடப்பட்டதில் அதானி கீரின் எனர்ஜி மற்றும் அமெரிக்காவின் அசூர் பவர் ஆகியவை இணைந்து 12 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை மத்திய அரசின் SECI நிறுவனத்திற்கு விற்கப்பட வேண்டும், இதுதான் ஒப்பந்தம்.

இந்த அமெரிக்காவின் அசூர் பவர் தான் அதானி குழுமத்துடன் இணைந்து இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, இதோடு அதானி குழுமம் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பல தவணையில், பல முறையில் 3 பில்லியன் டாலர் வரையில் கடன் பெற உதவியது.

அமெரிக்க நீதித்துறையின் 52பக்க குற்ற அறிக்கையில் 7 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டாலும், co-conspirators பெயரில் 2 பேர் சேர்த்துள்ளது. இவர்கள் தான் அசூர் பவர் வாயிலாக அமெரிக்காவில் இருந்துகொண்டு அனைத்து விதமான பணிகளையும் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+