டெல்லி: ஆசிய தொழில் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, 2023-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டிற்கான மொத்த சம்பளமாக ரூ. 9.26 கோடி பெற்றுள்ளார். இது அவரது துறை சகாக்கள் மற்றும் சில முன்னணி நிர்வாகிகளின் சம்பளத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.
பில்லியனர் கவுதம் அதானி, சம்பளமாக FY24-இல் அவரது உயர் அதிகாரிகள் மற்றும் சகாக்களை விட குறைவாக ரூ. 9.26 கொடியைப் பெற்றுள்ளார். அதானி குழுமம் துறைமுகங்கள் முதல் மின்சாரம் வரை பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 10 நிறுவனங்களில் இருந்து மட்டுமே கவுதம் அதானி சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் அதானி 2023-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) நிறுவனத்திடமிருந்து ரூ. 2.19 கோடி சம்பளம் மற்றும் ரூ.27 லட்சம் படிகள் (perquisites) மற்றும் இதர சலுகைகளைப் (allowances) பெற்றுள்ளார். அதே போல அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ லிமிடெட் (APSEZ) நிறுவனத்திடம் இருந்து ரூ. 6.8 கோடி பெற்றுள்ளார். இதில், ரூ. 1.8 கோடி சம்பளமும், ரூ. 5 கோடி கமிஷனும் அடங்கும். ஆனால், AEL நிறுவனத்திடம் இருந்து எந்த கமிஷனும் கவுதம் அதானி பெறவில்லை.
ஆனால், AEL நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும் இயக்குநருமான வினய் பிரகாஷ், மொத்த ஊதியமாக ரூ. 89.37 கோடியும், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் ரூ. 9.45 கோடியும் பெற்றுள்ளனர். அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினீத் எஸ் ஜெயின் ரூ. 15.25 கோடியும், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (ATGL) CEO சுரேஷ் பி மங்லானி ரூ. 6.88 கோடியும் சம்பளமாகப் பெற்றுள்ளனர். அதானி வில்மர் நிறுவனத்தின் CEO அங்ஷு மல்லிக் ரூ. 5.15 கோடி சம்பாதித்துள்ளார்.
முக்கிய மேலாண்மை பணியாளர்கள் (KMPs) தவிர்த்து மற்ற பணியாளர்களுக்கு சராசரி ஊதிய உயர்வு 12 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய பணியாளர்களுக்கு சற்று குறைவான 5.37 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று AEL நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கவுதம் அதானியின் சம்பளம், இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் தலைவர்களின் சம்பளத்தை விட மிகக் குறைவு. சுனில் பார்தி மிட்டல் (ரூ. 16.7 கோடி), ராஜீவ் பஜாஜ் (ரூ. 53.7 கோடி), பவன் முஞ்சால் (ரூ. 80 கோடி) உட்பட, இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களின் தலைவர்களை விட கவுதம் அதானியின் சம்பளம் குறைவாக உள்ளது. L&T தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் மற்றும் இன்ஃபோசிஸ் CEO சலில் எஸ்.பரேக் போன்ற நபர்களும் அதிக சம்பளம் பெறுகின்றனர். இதற்கிடையில், கோவிட்-19 தொடங்கியதிலிருந்து முகேஷ் அம்பானி சம்பளம் பெறுவதை நிறுத்திவிட்டார்.
கூடுதலாக, கவுதமின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி ரூ. 8.37 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இதில் AEL நிறுவனத்திடமிருந்து ரூ. 4.71 கோடி கமிஷன் கிடைத்துள்ளது. கவுதம் அதானியின் மருமகன் பிரணவ் அதானி ரூ. 4.5 கோடி கமிஷன் உட்பட ரூ. 6.46 கோடியை பெற்றுள்ளார்.
கவுதம் அதானி சமீபகாலமாக முகேஷ் அம்பானியுடன் ஆசியாவின் பணக்காரர் என்ற பட்டத்திற்காக போட்டியிட்டு வருகிறார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி, அவரது தற்போதைய நிகர மதிப்பு $106 பில்லியன் ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications