இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி (Gautam Adani), 2024-25 நிதியாண்டில் மொத்தமாக ரூ.10.41 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார். இது அவரது ஒன்பது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இரண்டான அதானி எண்டர்பிரைசஸ் (Adani Enterprises) மற்றும் அதானி போர்ட்ஸ் (Adani Ports) நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறப்பட்டதாகும். அவரது சம்பளம் நிதியாண்டு 2023-24 இல் ரூ.9.26 கோடியிலிருந்து 12% உயர்ந்திருந்தாலும், இந்தியாவின் பல தொழில்துறை மற்ற நிறுவனங்கள் மற்றும் அவரது குழுமத்தில் உள்ள சில உயர் நிர்வாகிகளை விடவும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள விவரங்கள்: 62 வயதான அதானி, தனது துறைமுகங்கள்-மின்சார கூட்டு நிறுவனத்தில் பட்டியலிடப்பட்ட ஒன்பது நிறுவனங்களில் இரண்டிலிருந்து மட்டுமே சம்பளம் பெற்றதாக, குழுமத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) நிறுவனத்திலிருந்து சம்பளமாக ரூ.2.26 கோடியும், சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் பிற சலுகைகளில் ரூ. 28 லட்சமும் பெறுகிறார். இதில் மொத்த வருவாய் ரூ.2.54 கோடி ஆகும். இது முந்தைய நிதியாண்டில் ரூ.2.46 கோடியாக இருந்தது

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) நிறுவனத்திலிருந்து சம்பளமாக ரூ.1.8 கோடியும், கமிஷன் ரூ.6.07 கோடியும் பெறுகிறார். இதன் மொத்த வருவாய் ரூ.7.87 கோடி (2023-24 ஆம் ஆண்டில் APSEZ இலிருந்து அவர் பெற்ற ரூ.6.8 கோடியுடன் ஒப்பிடும்போது இது அதிகமாகும். மொத்தமாக, நிதியாண்டு 2024-25 இல் அதானியின் மொத்த ஊதியம் ரூ.10.41 கோடியாகும்.
பிற முன்னணி தொழிலதிபர்களுடன் ஒப்பிடுகையில் அதானியின் சம்பளம்: PTI தகவல்படி, இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பெரிய குடும்பத்திற்குச் சொந்தமான கூட்டு நிறுவனங்களின் தலைவர்களை விட அதானியின் சம்பளம் குறைவாக உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani), கோவிட்-19 பரவியதிலிருந்து தனது முழு சம்பளத்தையும் விட்டுக்கொடுத்து வருகிறார். அதற்கு முன்பு அவர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாகக் குறைத்திருந்தார். தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள சுனில் பாரதி மிட்டல் 2023-24ல் ரூ.32.27 கோடியை சம்பளம் பெற்றார். அதேபோல், ராஜீவ் பஜாஜ் நிதியாண்டு 24ல் ரூ.53.75 கோடி சம்பாதித்துள்ளார். பவன் முன்ஜால் நிதியாண்டு 24ல் ரூ.109 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அதேபோல், எல்&டி தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் நிதியாண்டு 25ல் ரூ.76.25 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் எஸ்.பரேக் நிதியாண்டு 25ல் ரூ.80.62 கோடி சம்பளம் பெற்றுள்ளார். மிட்டலின் பாரதி ஏர்டெல், முன்ஜாலின் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவற்றின் சமீபத்திய ஆண்டு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குடும்பத்தினர் மற்றும் குழும தலைமை நிர்வாகிகளின் சம்பளம்: மற்ற புரோமோட்டர்களை போலவே, அதானியும் குழு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருவாய்க்கு செலுத்தக்கூடிய ஈவுத்தொகையிலிருந்து (dividends) சம்பாதிக்கிறார். இருப்பினும், அவரது சம்பளம் அவரது குழும நிறுவனங்களின் குறைந்தது இரண்டு தலைமை நிர்வாகிகளை விடக் குறைவு.
AEL தலைமை நிர்வாக அதிகாரி வினய் பிரகாஷ் ரூ.69.34 கோடியை பெறுகிறார். இதில் ரூ.4 கோடி சம்பளம், ரூ.65.34 கோடி சம்பளப் பொருட்கள், கொடுப்பனவுகள் மற்றும் ஊக்கத்தொகைகள் ஆகியவை அடங்கும். அதேபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) நிர்வாக இயக்குனர் வினீத் எஸ் ஜெயின் ரூ.11.23 கோடி பெறுகிறார். குழும CFO ஜூகேஷிந்தர் சிங் FY 2025ல் ரூ.10.4 கோடி பெறுகிறார்.
அதானியின் மகன் கரண் APSEZ இலிருந்து ரூ.7.09 கோடியைப் பெற்றார். APSEZ தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வனி குப்தா ரூ.10.34 கோடியை பெற்றுள்ளார். இது கரண் மற்றும் குப்தா இருவருக்கும் FY25க்கான வேரியபிள் பே FY26 இல் வழங்கப்படும்.அதேபோல், கௌதம் அதானியின் தம்பி ராஜேஷ் AEL நிறுவனத்திடமிருந்து ரூ.9.87 கோடி பெறுகிறார். அவரது மருமகன் பிரணவ் ரூ.7.45 கோடியையும், அவரது மற்றொரு மருமகன் சாகர் AGEL நிறுவனத்திடமிருந்து ரூ.7.50 கோடியையும் ஈட்டுகிறார். நகர எரிவாயு நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் பி. மங்லானி ரூ.8.21 கோடி (2024-25), அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரூ.14 கோடியை பெறுகின்றனர்.அதானி பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பி. கயாலியா 2025 நிதியாண்டில் ரூ.9.16 கோடி ஈட்டுகிறார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, கௌதம் அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு $82.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவர் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தைப் பிடிக்க அம்பானியுடன் போட்டியிட்டு வருகிறார். 2022 ஆம் ஆண்டில் அவர் மிகவும் பணக்கார ஆசியரானார். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் (Hindenburg Research) நிறுவனத்தின் அறிக்கை வெளியான பிறகு 2023 ஆம் ஆண்டில் அவரது குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட $150 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்ததால் அந்த இடத்தை இழந்தார். கடந்த ஆண்டு அவர் இரண்டு முறை முதலிடத்தை மீண்டும் பெற்றாலும், மீண்டும் அம்பானிக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுத்தார். தற்போது, உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி $104 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 17வது இடத்திலும், அதானி 20வது இடத்திலும் உள்ளனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications