இந்தியாவின் மின்சார துறையில் முக்கியமான நிறுவனமாக உருவெடுத்துள்ள அதானி பவர் லிமிடெட், கிழக்கு இந்தியாவில் உள்ள 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தி நிலையத்தில் பல புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த மின்சார நிலையத்தில் இருந்து தான் முதல் முறையாைக வெளிநாட்டுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் கௌதம் அதானி. அதானி பவர் தற்போது வங்கதேசத்திற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான கட்டணத்தைத் தாமதமாக அளித்து வருவதால் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இது மட்டும் அல்லாமல் பங்களாகதேஷ் அரசு அதானி பவர் நிறுவனத்திற்குப் பணத்தைத் தருவதாக ஒப்புதல் அளித்தாலும், விலை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தைத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இதனால் பங்களாதேஷ் - அதானி பவர் மத்தியிலான ஒப்பந்தம் விரைவில் தடைப்படவோ அல்லது மறுசீரமைப்பு செய்யப்படும். இது இரண்டுமே கௌதம் அதானிக்கு பஞ்சாயத்து தான்.
இந்த நிலையில் தான், இந்திய அரசாங்கத்திடமிருந்து கூடுதல் சலுகைகளைக் கோருவதற்காக அதானி பவர் நிறுவனம் தனது கோரிக்கைகளை அடுக்கி வருகிறது.
இந்திய அரசு யாருக்கும் அளித்தடாத வகையில் ஆகஸ்ட் மாதம் கிழக்கு இந்திய பகுதியில் இருக்கும் இந்த மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை உள்நாட்டு சந்தைக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) அமைந்துள்ளதால் உள்நாட்டு மின்சார விற்பனையில் சில தடை ஏற்பட்டு உள்ளது.
இந்த மின்சார உற்பத்தில் தளத்தில் இருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு விற்பனை செய்யப்படும் மின்சாரத்தை தாண்டி மீதமுள்ளவற்றை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய, அதானி பவர் நிலையத்தை இயக்கப் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளது அதானி பவர் நிறுவனம்.
இந்த சலுகைகள் இல்லையெனில், இந்த மின்சார நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இறக்குமதி செய்யப்பட்டதாக வகைப்படுத்தப்பட்டு, கூடுதல் வரிகளுக்கு உட்படுத்தப்படும், இதனால் இந்திய சந்தையில் இதை யாரும் அதிக விலை கொடுத்து வாங்க வரமட்டார்கள். எனவே தான் அதானி பவர் இங்கு பயன்படுத்தப்படும் நிலக்கரிக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுவது மூலம் விலையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
மத்திய அரசு அதானி பவர் நிறுவனத்திற்கு இந்த சலுகையை கொடுத்தால், இந்தியா முழுவதும் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் நிறுவனங்களும் இதுப்போன்ற சலுகையை கேட்கும் என்பதால் மத்திய அரசுக்கு இது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications