இந்தியா வர்த்தகச் சந்தையில் மிகவும் பிரபலமான ஒரு வர்த்தகக் குழுமம் ரேமெண்ட் குரூப் லைப்ஸ்டைல் முதல் ரியல் எஸ்டேட் வரையில் பல துறைகளில் வர்த்தகம் செய்து வரும் இக்குழுமம் சமீபத்தில் OEM தயாரிப்பில் இறங்குவதற்காக Maini Precision Products Limited என்றும் நிறுவனத்தில் சுமார் 682 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து 59.25 சதவீத பங்குகளை வாங்கியது.
இதன் மூலம் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்கள் கண்களும் Raymond குழுமம் மீது திரும்பிய இதே நேரத்தில் தான் இக்குழும தலைவர் கௌதம் சிங்கானியா தனது 32 வருட திருமணத்தை நவாஸ் மோடியுடன் முடித்துக்கொள்வதாகவும் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தீபாவளி பார்ட்டிக்கு வீட்டினுள் அனுமதிக்காதது, கௌதம் சிங்கானியா சொத்தில் 75 சதவீத பங்கீட்டை அவருடைய மனைவி நவாஸ் மோடி கேட்டது என்ன அடுத்தடுத்து Raymond குழுமம் மீடியா வெளிச்சத்திலேயே இருந்தது.
இந்த நிலையில் நேற்று நவாஸ் மோடி 2022 செப்டம்பர் 10 ஆம் தேதி கௌதம் சிங்கானியா தன்னையும், தன் மகளையும் (மைனர்) அடித்து, கையால் குத்தி, எட்டி உதைத்த சம்பவம் குறித்தும், அதன் பின்னர் நீதா அம்பானி மற்றும் அவரது மகன் அனந்த் அம்பானி ஆகியோர் வந்து அவர்களைக் காப்பாற்றியதை ஒரு புத்தக வெளியீட்டின் போது பகிர்ந்தார்.
எதற்காகக் கௌதம் சிங்கானியா தனது காதல் மனைவி மற்றும் மைனர் மகளை அடித்தார் என்பதையும் நவாஸ் மோடி பகிர்ந்துள்ளார். கௌதம் சிங்கானியா எங்களை முதன் முதலில் அடிக்கத் துவங்கியது 2022 ஆம் ஆண்டுச் செப்டம்பர் 10 ஆம் தேதி.
கௌதம் சிங்கானியா தனது மைனர் மகள் நிஹாரிகாவையும் தன்னையும் சுமார் 15 நிமிடங்கள் சளைக்காமல் அடித்து, பொருட்களை வீசி, உதைத்து, கையால் குத்தினான் என நவாஸ் மோடி இந்தப் பேட்டியில் தெரிவித்தார். எதனால் இந்தச் சம்பவம் நடந்தது..?
கௌதம் சிங்கானியா பிறந்த நாள் கொண்டாட்டம் 9ஆம் தேதி நடந்தது, 10ஆம் தேதி காலை 5 மணிக்கு நான் பயன்படுத்தும் அதே பாத்ரூம்-ஐ கௌதம் பயன்படுத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தார். அதே பெட்ரூம் உடன் இரண்டு பாத்ரூம் உள்ளது. அந்த தளத்தில் கூடுதலாக 3 பாத்ரூம் உள்ளது. 39 மாடிக் கட்டிடத்தில் ஏகப்பட்ட பாத்ரூம் உள்ளது.
ஆயினும் கௌதம் தனக்கு இருக்கும் பவர் மற்றும் அதிகாரத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகப் பாத்ரூம் பயன்படுத்துவதைக் காட்டி என்னையும் என் மகள் மீது தனது அதிகாரத்தைக் காட்டினார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நான் என் மகளை இழுத்துக்கொண்டு பாதுகாப்பான ஒரு அறைக்குச் சென்று பூட்டிக்கொண்டேன்.
இந்தச் சம்பவம் நடக்கும் போது பல விருந்தினர்கள் வீட்டில் இருந்தனர், எங்களை அடித்துவிட்டுத் திடீரென காணாமல் போனார் கௌதம் சிங்கானியா, கட்டாயம் துப்பாக்கியை எடுக்கத்தான் சென்று இருப்பார் என நம்புவதாகத் தெரிவித்தார் நவாஸ் மோடி.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications