ரேமண்ட் குழும தலைவர் கௌதம் சிங்கானியா தனது மனைவியை விவாகரத்துச் செய்வதாக அறிவித்ததில் இருந்து அவர் மனைவி நாவஸ் மோடி 2022 செப்டம்பர் 10 ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து மீடியா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
கௌதம் சிங்கானியா தன்னையும், தன் மகளையும் (மைனர்) அடித்து, கையால் குத்தி, எட்டி உதைத்த சம்பளம் குறித்தும், அதன் பின்னர் நீதா அம்பானி மற்றும் அவரது மகன் அனந்த் அம்பானி ஆகியோர் வந்து அவர்களைக் காப்பாற்றியதை ஒரு புத்தக வெளியீட்டின் போது நவாஸ் மோடி பகிர்ந்தார்.

இதுமட்டும் அல்லாமல் நவாஸ் மோடி, கௌதம் சிங்கானியா-வின் மனநிலை, அவர் யாரை சூப்பர் ஹீரோவாக நம்புகிறார் போன்ற முக்கியமான விஷயத்தையும் பகிர்ந்தார். நவாஸ் மோடி இப்பேட்டியில் பேசுகையில்.....
கடந்த ஆண்டுக் காலமான தொழிலதிபர் அதுல்யா மஃபத்லால்-ஐ தான் எப்போதும் தன்னுடைய சூப்பர் ஹீரோவாகவே கவுதம் சிங்கானியா கருதுவதாக நவாஸ் மோடி இப்பேட்டியில் கூறினார். மஃபத்லால் தனது மனைவியைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதுல்யா மஃபத்லால் தனது மனைவிக்கு என்ன செய்தார், அவர் தனது மனைவி பயல் மஃபத்லாலை ஷாப்பிங் சென்றபோது காரில் இருந்து சாலையில் தூக்கி எறிந்தார். அதுல்யா இழிவான முறையில் அவரது மனைவியைத் தங்கள் பங்களாவிற்கு வெளியே பூட்டினார்.

வீட்டில் இருப்பவர்கள் யாரும் பயல்-ஐ அழைக்கவில்லை, எந்த ஊழியர்களும் அவரது மெசேஜ்-க்கு பதிலளிக்கவில்லை, அவளால் தன் குழந்தைகளைப் கூடப் பார்க்க முடியவில்லை, பயல் மஃபத்லால் தன்னால் தன் வீட்டில் இருந்து உடைகளைப் பெற முடியவில்லை.
இதைப் பார்த்து வியந்த கௌதம் சிங்கானியா ஆஹா என்ன ஒரு மனிதன்! அதாவது 'என்ன சக்தி, என்ன கட்டுப்பாடு, என்ன வலிமை... இவர் ஒரு சூப்பர்ஹீரோ! என நம்புகிறான் என நவாஸ் மோடி.
எனக்கு அறிந்த வரை நீண்ட காலமாக அதுல்யா மஃபத்லால் தனது மனைவிக்குச் செய்த அட்டூழியத்தைக் கௌதம் சிங்கானியா எனக்குச் செய்ய வேண்டும் என விரும்பிய ஒரு விஷயம், அது தான் அப்போது நடக்கிறது என நவாஸ் மோடி இப்பேட்டியில் தெரிவித்தார்.
நவாஸ் மோடியின் இப்புதிய குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் கௌதம் சிங்கானியா மறுத்துவிட்டார். எனது இரண்டு அழகான மகள்களின் நலன் கருதி, எனது குடும்பத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன், மேலும் நான் எந்தக் கருத்தையும் கூற விருபம்வில்லை. தயவுசெய்து எனது ப்ரைவசியை மதிக்கவும் என்று இந்தியா டுடே கேள்விக்கு ஈமெயில் மூலம் மூலம் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications