ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கௌதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியா உடன் பிரிந்துவிட்டதாகத் கடந்த வாரம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். காதல் திருமணம் செய்துக்கொண்டு 32 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு நிஹாரிகா மற்றும் நிசா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து தீபாவளி பார்ட்டிக்கு கெளதம் சிங்கானியா தங்கியிருந்த வீட்டுக்கு பல பிரபலங்கள் அழைக்கப்பட்ட நிலையில், அப்போது நவாஸ் மோடி-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பார்ட்டிக்கு முன்பு தான் கௌதம் சிங்கானியா பிரிவு குறித்த டிவீட்டை செய்திருந்தார்.

ஆயினும் அழைப்பை ஏற்று நவாஸ் மோடி சென்றார், அப்போது அவருடைய சொந்த வீட்டுக்கு சென்ற போது காவலர்கள் நவாஸ் மோடி உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். செக்யூரிட்டி அதிகாரிகள் அவரை உள்ளே விடாமல் வெளியே நிற்க வைத்த நிலையில் ரோட்டில் உட்கார்ந்தது பெரும் பிரச்சனையாக வெடித்தது.
இதனிடையில் கௌதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்த நிலையில், நவாஸ் மோடி தனுக்கும் தன் பிள்ளைகளின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்திற்காகவும் கெளதம் சிங்கானியா-வின் 1.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் 75 சதவீத தொகையை கேட்டுள்ளார். இதற்கு டிரஸ்ட் வடிவில் சொத்துக்களை அனுபவிக்க கௌதம் சிங்கானியா ஒப்புதல் அளித்துள்ளார், ஆனால் அதற்கு நவாஸ் மோடி மறுத்துள்ளார்.
இவை அனைத்தும் ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா வீட்டில் நடக்கும் பிரச்சனை, ஆனால இதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
கௌதம் சிங்கானியா உடனான பிரிவை அறிவித்த நவம்பர் 13ஆம் தேதியில் இருந்து ரேமண்ட் பங்குகள் சுமார் 12 சதவீதம் சரிந்து சந்தை மூலதன மதிப்பீட்டில் சுமார் ரூ.1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியாக 4.4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் இதுதான்..!


Click it and Unblock the Notifications
