இந்திய மிடில் கிளாஸ் மக்கள் மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியாக வேமாக வளர முக்கிய காரணமாக இருந்தது ஐடி சேவை துறை தான். இத்துறை உருவாக்கிய கோடிக்கணக்காக வேலைவாய்ப்புகள் தான் இன்று ஸ்டார்ட்அப் சந்தை, டிஜிட்டல் சேவை தளங்கள் உருவாக விதையாக செயல்பட்டது.
இந்த நிலையில் இந்திய ஐடி துறையில் பெரிய மாற்றம் நடந்து வருகிறது. சமீப காலமாக இந்தியாவுக்கு வரும் குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள்-GCC எனப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளை நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கி வருகிறது. இதன் விளைவாக தற்போது இந்திய ஐடி சேவை துறையில் ஜாம்வான்களாக நிற்கும் TCS, இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்களை காட்டிலும் அதிக சம்பளத்திலும், அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் இருக்கும் ஜிசிசி நிறுவனங்கள், ஐடி சேவை நிறுவனங்களை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக ஊழியர்களை பணியில் அமர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ஐடி துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வேலைவாய்ப்பு மாற்றமாக பார்க்கப்படுகிறது.
பிரபல வேலைவாய்ப்பு நிறுவனமான டீம்லீஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருக்கும் GCC நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 18-27 சதவீதம் அதிகரிக்கின்றன. இதுவே ஐடி சேவை நிறுவனங்களில் வெறும் 4-6 சதவீதம் மட்டுமே அதிகரித்து வருகின்றது. இது ஐடி சேவை துறையின் எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்பதில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
GCC வேலைவாய்ப்புகள்
GCCகள் தற்போது இந்தியாவில் சுமார் 20 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளன. 2022ல் இந்த எண்ணிக்கை 12 லட்சம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் சராசரியாக 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதை காட்டுகிறது. 2025ஆம் நிதியாண்டில் மட்டும் 1.6 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஜிசிசி-க்கள் உருவாகியுள்ளன. 2026இல் இது 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் புதிதாக 90 நிறுவனங்கள் GCC அலுவலகங்களை தொடங்கியுள்ளன. 150க்கும் மேற்பட்ட ஏற்கனவே உள்ள ஜிசிசி-க்கள் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்துள்ளன என டீம்லீஸ் தரவுகள் கூறுகிறது.
ஐடி சேவை துறை வேலைவாய்ப்புகள்
மறுமுனையில் இந்தியாவின் ஆஸ்தான ஐடி சேவை நிறுவனங்கள் ஆண்டுக்கு 25,000 முதல் 40,000 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்து வருகின்றன. ஒரு காலத்தில் ஒரு நிறுவனம் மட்டுமே 20000-40000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி வந்தது மறக்க முடியாது.
இதற்கு மத்தியில் TCS போன்ற முன்னணி நிறுவனம் 2 சதவீத ஊழியர்கள் அதாவது 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதோடு பல நிறுவனங்கள் 'சைலன்ட் லேஆஃப்' செய்து வருகின்றன. அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட இதில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இப்படி இந்தியாவில் கொடிக்கட்டி பறந்த ஐடி சேவை துறை நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
GCC நிறுவனங்கள் தற்போது அதிகளவில் AI மற்றும் மெஷின் லேர்னிங், க்ளவுட் இன்ஜினியரிங், சைபர் செக்யூரிட்டி, ப்ளாட்ஃபார்ம் மாடர்னைசேஷன், புராடக்ட் இன்ஜினியரிங், டிஜிட்டல் கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ், டேட்டா பைப்லைன்கள் ஆகிய பிரிவுகளிலேயே அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஐடி சேவை துறை நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஜிசிசி நிறுவனங்கள் அதிகளவிலான சம்பளத்தை கொடுக்கிறது. சில பிரிவுகளில் பிரஷ்ஷர்களுக்கே 10-15 லட்சம் வரையிலான சம்பளம் கொடுக்கப்பட்டு வரும் காரணத்தால் ஐடி சேவை துறையில் இதில் பெரிய அளவில் பின்தங்கியே உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications