பெங்களூரு: பன்னாட்டு நிறுவனங்கள் குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர்கள் (global capability centres (GCCs) )எனப்படும் ஜிசிசி மையங்களை இந்தியாவில் நிறுவுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவில் அமைக்கப்படும் போது நுழைவு நிலையிலேயே அதிக அளவிலான ஊதியம் வழங்குவதாக டீம் லீஸ் டிஜிட்டல் (TeamLease Digital) என்ற நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
TeamLease Digital என்பது பல்வேறு நிறுவனங்களுக்கும் ஊழியர்களை தேர்வு செய்து வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாகும் . இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜிசிசி மையங்களில் தற்போது வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என தெரிவிக்கிறது.

மேலும் தற்போது இருக்கும் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்டை விட திறமையான ஊழியர்களுக்கு 30% வரை அதிக ஊதியம் தருவதற்கு இந்த ஜிசிசி மையங்கள் தயாராக இருக்கின்றன என தெரிவிக்கிறது. இந்த போக்கு அடுத்த ஓராண்டு காலத்தில் 40 சதவீதம் என்ற அளவை கூட எட்டும் என தெரிவிக்கிறது.
அதேபோல ஐடி சேவை பிரிவுகளிலும் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், டேட்டா இன்ஜினியரிங் மற்றும் கிளவுட் டெக்னாலஜிஸ் ஆகியவற்றில் திறன் வாய்ந்த ஃபிரஷர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை அதிக ஊதியத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என தெரிவிக்கிறது.
எனவே ஐடி துறையில் வேலை தேடுவோர் இந்த பிரிவுகளில் திறன் பெற வேண்டும் என கூறுகிறது. மத்திய அளவிலான வேலைகளில் ஊதிய உயர்வு என்பது 7 முதல் 10 சதவீதமாக இருக்கிறது என கூறப்படுகிறது.
மூத்த மேலாண்மை அளவிலான வேலைகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் 21% வரை அதிக ஊதியத்துடன் வேலைகள் கிடைக்கின்றன என இந்த நிறுவனம் கூறுகிறது. டேட்டா இன்ஜினியரிங், ப்ராடக்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் ஊதிய உயர்வு கணிசமாக இருக்கிறது என இந்த நிறுவனம் கூறுகிறது.
அது மட்டும் இன்றி AWS மற்றும் Microsoft Azure போன்ற சான்றிதழ்களை பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறதாம். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் நிபுணத்துவம் பெற்ற 20 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர் என இந்த நிறுவனம் கூறுகிறது. எனவே இந்த பிரிவில் திறன் பெற்றவர்கள் விரைவில் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என சொல்லப்படுகிறது.
தற்போது ஐடி உள்ளிட்ட துறைகளில் வேலையில் இருப்பவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன்களை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எனவே நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்பவர்களுக்கு வரும் காலம் வசந்த காலமாக இருக்கும் என டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனம் கூறுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications