சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் புதிய வர்த்தகத்தை பெறுவது பெரும் தலைவலியாக இருப்பதாக இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் புலம்பி வரும் வேளையில் GCC நிறுவனத்தால், இந்திய ஐடி சேவை நிறுவனங்களான TCS, Infosys, Wipro, HCL புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள் (GCC) என அழைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய டெலிவரி சென்டர்களின் வருகையும், அதிக்கமும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் சம்பள உயர்வில் தாமதம், வேரியபிள் பே குறைப்பு, பதவி உயர்வை தற்காலிமாக நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகளை சமீபத்தில் எடுத்து வருகிறது.

இதனால் ஐடி ஊழியர்கள் வேறு வேலைவாய்ப்புகளை தேட துவங்கி GCC நிறுவனத்தில் சேர துவங்கியுள்ளனர். இந்திய ஐடி சேவை நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. சொல்லப்போனால் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை சேர்ப்பதை பெரிய அளவில் குறைத்துள்ளது, சில நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் ஜிசிசி நிறுவனங்களில் தற்போது 16.8 லட்சம் பேர் பணியாற்றி வரும் வேளையில், 2026 ஆம் ஆண்டுக்குள் இதன் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. காரணம் இந்தியாவில் புதிதாக ஜிசிசி கிளைகள் துவங்கப்படுவது மட்டும் அல்லாமல் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் விரிவாக்கம் அடைந்தும் வருகிறது.
இதனால் TCS, Infosys, Wipro, HCL நிறுவனங்களில் இருக்கும் 4-10 வருட அனுபவம் கொண்ட ஐடி ஊழியர்கள், ஜிசிசி நிறுவனங்களுக்கு 30 - 40 சதவீத சம்பள உயர்வுடன் மாறி வருகின்றனர். இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் வெளியேறும் ஊழியர்களை தக்க வைக்கவும், புதிதாக ஊழியர்களை நியமிக்கவும் அதிகப்பணத்தை செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதை தாண்டி ஹெச்சிஎல், இன்போசிஸ் ஆகியவை டிசம்பர் காலாண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அளிக்க துவங்கியுள்ள காரணத்தால் கூடுதல் நிதி சுமை உருவாக உள்ளது. ஐடி சேவை நிறுவனங்களின் மொத்த வருவாயில் சம்பளத்திற்கான செலவுகளின் பங்கீடு மட்டுமே செப்டம்பர் மாதத்தில் 56.6 சதவீதமாக உள்ளது.
தற்போது ஜிசிசி நிறுவனங்கள் இந்த மோசமான காலக்கட்டத்திலும் ஜிசிசி நிறுவனங்கள் அதிகப்படியான ஊழியர்களை சேர்க்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்கள் முக்கியமான திறன்வாய்ந்த ஊழியர்களை இழந்து வருகிறது.


Click it and Unblock the Notifications