பலருக்கும் ஷெங்கன் விசா பற்றி தெரிந்திருக்கும், இந்த ஒரு விசா மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்த்தியுள்ளது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் மாற்றியுள்ளது.
இந்த வெற்றியை வளைகுடா நாடுகளும் சுவைக்க ஆர்வமாக உள்ளது, குறிப்பாக அனைத்து வளைகுடா நாடுகளும் தனது பொருளாதாரத்தைக் கச்சா எண்ணெய்-க்கு மாற்றுப் பாதையில் உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் ஷெங்கன் விசா போன்ற விசா பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும்.

ஷெங்கன் விசா என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் (European Union - EU) 26 நாடுகளுக்குள் வெளிநாட்டு பயணிகள் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கான ஒரே விசா ஆகும். இந்த 26 நாடுகளுக்கு சுற்றுலா, பிஸ்னஸ், குடும்ப உறுப்பினர்கள் உடனான சந்திப்பு என பல தரப்பினர் இந்த ஷெங்கன் விசா-வை பயன்படுத்தலாம்.
மேலும் ஷெங்கன் விசா-வுக்கு விண்ணப்பித்து ஷெங்கன் விசா பெற்றால், ஐரோப்பாவில் இருக்கும் 26 நாடுகளில் சுதந்திரமாகப் பயணம் செய்ய முடியும்.
இந்த நிலையில் வளைகுடா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (Gulf Cooperation Council - GCC) புதிய ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கியுள்ளது.
"GCC Grand Tours" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விசா மூலம், பயணிகள் ஆறு வளைகுடா நாடுகளுக்கும் பயணம் செய்து 30 நாட்களுக்கு மேல் தங்கும் வசதியை அளிக்க உள்ளது.
Arabian Travel Market (ATM) நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தூக் அல் மர்ரி இந்த புதிய விசா குறித்த அறிவிப்பை வெளியிட்டார். வளைகுடா நாடுகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், இந்த பகுதி முழுவதும் பயணம் செய்வதை எளிதாக்குவதற்குமான நோக்கத்தோடு இந்த GCC Grand Tours சிறப்பு விசா-வை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (GCC) என்பது பஹ்ரைன், குவைட், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஆறு நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இது Cooperation Council for the Arab States of the Gulf என்பதன் சுருக்கம்.
இந்த GCC Grand Tours என்ற புதிய ஒருங்கிணைந்த விசா, வளைகுடா பிராந்தியத்தில் சுற்றுலாத்துறைக்கு மட்டும் அல்லாமல் ஹோட்டல் துறையில் அறை முன்பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்த பிராந்தியத்தைப் பிராந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னணி இடமாக நிலைநிறுத்தும்.
இதேபோல் பஹ்ரைன், குவைட், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என தனித்தனியாகச் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தும் செலவுகளைக் குறைக்கும். இந்த நாடுகள் மத்தியிலான மோசமான போட்டியைக் குறைக்கும். இதேபோல் ஒரு விசா வாங்கிவிட்டால் பிற நாடுகளுக்குப் பயணிக்கும் வாய்ப்புகளைத் திறந்துவிடும்.
அமைச்சர் அல் மர்ரி அவர்களின் அறிவிப்பு, பல்வேறு வளைகுடா சுற்றுலாத்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழு கலந்துரையாடலுக்குப் பிறகு வந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications