இந்திய ஐடி துறை பெரும் தடுமாற்றத்தில் இருந்து மீண்டு வந்து அடுத்தடுத்து புதிய திட்டங்களை பெற்று வந்தாலும் இத்துறையின் வேலைவாய்ப்பு சந்தை இன்னும் பழைய நிலைமைக்கு திரும்பவில்லை என்பது தான் உண்மை. இந்தியாவில் தொடர்ந்து ஒவ்வொரு காலாண்டிலும் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் ஒன்று ஐடி துறை.
இந்திய ஐடி துறையில் சுமார் 60 லட்சம் பேர் நேரடியாக பணியாற்றி வருகின்றனர், இத்துறையை சார்ந்து மட்டும் இந்திய வர்த்தக சந்தையில் குறிப்பிடத்தக்க சதவீதம் இயங்கி வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை கொண்டு இருக்கும் துறையாக ஐடி சேவை துறை உள்ளது.

ஆனால் 2023 ஆம் ஆண்டு இந்திய ஐடி துறைக்கு சரியான வர்த்தக சூழ்நிலையை உருவாக்கவில்லை இதனால் ஐடி துறையின் வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதுக்குறித்து இந்தியாவின் முன்னணி ஸ்டாஃபிங் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு தேடுதல் தளத்தின் தலைவர்கள் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளனர்.
Quess crop நிறுவனத்தின் சிஇஓ குருபிரசாத் கூறுகையில் ஐடி சேவைத்துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகான டிமாண்ட் இல்லாத பட்சத்தில் GCC நிறுவனங்கள் உடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம். GCC மூலம் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புக்கான டிமாண்ட் உருவாக்கப்பட்டாலும், இயல்பான நிலையை ஒப்பிடுகையில் சுமார் 60 சதவீதம் குறைவாகவே உள்ளது.
மேலும் 2024 ஆம் நிதியாண்டின் 2வது காலண்டிலும் இதே நிலை தான் தொடரும் என கணிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் முதல் நிலைமை மாற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என Quess crop நிறுவனத்தின் சிஇஓ குருபிரசாத் கூறுகிறார்.
இதேபோல் நாக்ரி தளத்தை இயக்கும் இன்போஎட்ஜ் நிறுவனத்தின் தலைவர் ஹிதேஷ் ஓபராய் கூறுகையில் ஐடி துறை வேலைவாய்ப்பில் GCC மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் 15- 20 சதவீத பங்கீடாக மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி டெலாய்ட் நிறுவனத்தின் ஆய்வறிக்கை படி இந்தியா GCC-களை அமைக்க சிறப்பான இடமாக உள்ளது என கெரிவித்துள்ளது. இதேபோல் நாஸ்காம் - Zinnov அறிக்கையில் 2026-27 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 2000 captives அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதேபோல் EY மற்றும் பாஸ்டன் கண்சல்டிங் குரூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய GCC-களில் 2030க்குள் 45 லட்சம் பேர் பணியாற்றுவார்கள் என தெரிவித்துள்ளது. GCC என்பது ஐடி சேவை மட்டும் அல்லாமல் அனைத்து துறை நிறுவனங்களும் இருக்கும். இந்தியாவில் இருந்து உலக நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் அனைத்துமே GCC ஆக கருதப்படுகிறது.
இந்தியாவில் GCC பங்கீடு தற்போது குறைவாக இருந்தாலும் அடுத்த 5 வருடத்தில் பெரியதாகவும், அடுத்த 15 வருடத்தில் இந்தியா ஐடி சேவை நிறுவனங்களுக்கு இணையாக வளரும் வாய்ப்புகளை கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இதில் முதலில் அதிகப்படியான வாய்ப்புகளை பெற போது ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் தான். ஐடி ஊழியர்களே என்ன செய்யப்போறீங்க..?!!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications