இந்தியாவில் ஜிசிசி எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் ஐடி நிறுவனங்களை விட சராசரியாக 12 லிருந்து 20 சதவீதம் கூடுதலாக சம்பளம் வழங்குவது தெரிய வந்துள்ளது.
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் ஜிசிசி எனப்படும் தங்களுடைய திறன் கிளைகளை இந்தியாவில் நிறுவுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. பெங்களூரு, சென்னை, ஐதராபாத் ஆகியவை அதிக ஜிசிசி மையங்களை கொண்ட நகரங்களாக இருக்கின்றன.

இந்த நிலையில் ஐடி நிறுவனங்களை விட தற்போது ஜிசிசி மையங்களில் தொழில் நிபுணர்களுக்கு அதிக ஊதியத்துடன் வேலை வாய்ப்பு கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டேட்டா சயின்ஸ் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு நுழைவு நிலையிலேயே ஆண்டுக்கு 14 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. அதே வேளையில் சாஃப்ட்வேர் டெவலப்பர்களை பொறுத்தவரை ஆண்டுக்கு 11 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
India's Talent Takeoff - The GCC 4.0 Story என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில் அடுத்த 12 மாதங்களில் இந்தியாவில் ஜிசிசி மையங்களில் ஊழியர்களுக்கான சம்பளம் 9.8% வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படக்கூடிய ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஜிசிசி மையங்கள் அதிக ஊதியத்தை வழங்குகின்றன. ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் நிபுணர்களுக்கு ஐடி நிறுவனங்களை விட ஜிசிசி மையங்கள் 30 சதவீதம் வரை கூடுதல் ஊதியம் வழங்குகின்றன.'
அதேபோல கிளவுட் ஆர்க்கிடெக், ப்ராடக்ட் டிசைனர் நிபுணர் பிரிவுகளிலும் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆட்டோமேஷன் இன்ஜினியர்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 20 லிருந்து 50 சதவீதம் வரை ஐடி நிறுவனங்களை விட ஜிசிசி மையங்களில் அதிக சம்பளம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
உலகின் gcc மையங்களில் சுமார் 55 சதவீத மையங்கள் இந்தியாவில் தான் இருக்கின்றன என கூறும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஜிசிசி மையங்களின் மதிப்பு 110 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என கூறுகின்றனர். இதனால் இந்த மையங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது குறிப்பாக அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதை நினைவு படுத்துகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் நிபுணர்களுக்கான ஊதியம் 2025 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 18 இலிருந்து 60 லட்சம் ரூபாயாகவும், 2030ல் 40 முதல் 1.5 கோடி ரூபாய் வரையிலும் உயருமாம். பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏஐ மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவுகளில் ஆண்டு 2 கோடி வரை ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications