சென்னை: பன்னாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்களில் (Global capability centres (GCCs)) அதிக அளவில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐடி நிறுவனங்களை விட ஜிசிசி மையங்கள் வேலை வாய்ப்புகளை 27 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய திறன் கிளைகளை இந்தியாவில் நிறுவுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறு வரக்கூடிய நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் ஜிசிசி மையங்களின் விருப்பமான இடமாக கருதப்படுகிறது.

ஜிசிசி மையங்களில் குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது . பொறியியல், ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு ஜிசிசி மையங்கள் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்குகின்றன. வாகன உற்பத்தி ,விமான போக்குவரத்து, வங்கி, நிதி சார்ந்த பல்வேறு செயல்பாடுகளுக்கும் ஜிசிசி மையங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
2025 நிதியாண்டில் ஜிசிசி மையங்கள் 1,40,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. இது 2024 ஆம் நிதி ஆண்டில் வெறும் 60,000 ஆக தான் இருந்தது. 2026 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1,80,000 ஆக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. அது தவிர இந்தியாவில் புதிதாக 100 ஜிசிசி மையங்கள் அமைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்போது 1860 ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெங்களூருவில் தான் அமைந்திருக்கின்றன.
அதே வேளையில் இந்தியாவின் முன்னணி ஐந்து ஐடி நிறுவனங்களில் 2024 ஆம் ஆண்டில் புதிதாக 80,000 - 84,000 பேர் வரை பிரஷர்களாக பணிக்கு எடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னணி ஐடி நிறுவனங்களில் எல்லாம் 2025 ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 11 ஆயிரம் பேர் மட்டுமே புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இந்தியாவில் தற்போது ஐடி பிரிவில் வேலை வாய்ப்பு மந்தமடைந்திருப்பதும் ஜிசிசி மையங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஜிசிசி மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு நிதி உதவிகளை வழங்குகின்றன.
சைபர் செக்யூரிட்டி, ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் டேட்டா கவர்னன்ஸ் ஆகிய பிரிவுகளில் வேலை வாய்ப்பு உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐடி நிறுவனங்களை விட ஜிசிசி மையங்கள் 20 - 25% வரை அதிக ஊதியத்தில் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கையும் அது சார்ந்த வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications