சர்வதேச அளவில் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களுடைய கிளைகளை நிறுவுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகைகளில் பல ஜிசிசி மையங்கள் பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே படையெடுக்கின்றன. அதனடிப்படையில் 825-க்கும் அதிகமான ஜிசிசி மையங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
இந்த ஜிசிசி மையங்களின் படையெடுப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்.. இந்தியாவின் உள்ள திறமையான பணியாளர்கள், சிறந்த சேவை வழங்குனர்கள், ஜிசிசி மையங்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கக் கொள்கைகள் தான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ANSR Q3 GCC அறிக்கை தெரிவிக்கிறது. அதோடு இந்த ஜிசிசி மையங்கள் மூலம் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்தியாவில் IT துறைகளுக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடியவை என்றால் அவை ஜிசிசி மையங்கள் தான். இந்தியாவில் பெங்களூரு தான் அதிக எண்ணிக்கையிலான ஜிசிசி மையங்கள் அமைக்கப்படும் பகுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூருவில் மட்டும் 560,000 நபர்கள் பணிபுரிகின்றனர்.
அதற்கு அடுத்தபடியாக ஹைதராபாத் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு 110 நிறுவனங்கள் 190,000 பேரை பணியமர்த்தியுள்ளன. இங்கு இடங்கள் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதாலும், திறமையானவர்கள் அதிகளவில் இருப்பதாலும், அகமதாபாத் மற்றும் கோயம்புத்தூர் போன்ற வளர்ந்து வரும் பெருநகரமல்லாத நகரங்கள் தற்போது பிரபலமடைய தொடங்கியுள்ளன.
வங்கி, நிதி சேவைகள் மற்றும் BFSI துறைகள் ஜிசிசி செயல்பாடுகளுக்கு அதிகம் பங்களிக்கின்றன. அதைத் தொடர்ந்து உற்பத்தி மற்றும் சில்லறை பொருட்கள் துறைகள் முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளன. 85 சதவீத ஜிசிசி-கள் டிஜிட்டல் வணிகத்திலும், 90 சதவீத ஜிசிசி-கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிசின் லேர்னிங் மற்றும் டேட்டா அனாலிடிக்ஸ் போன்ற முன்னணி தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றன.
அதோடு வெளியான அறிக்கையின் படி ஜிசிசி மையங்கள் அதிக அளவில் இடங்களை குத்தகைக்கு எடுத்த வருகின்றன. 2024-ஆம் ஆண்டின் மூன்றாம் காலண்டில் 8.2 மில்லியன் சதுர அடியை ஜிசிசி-கள் குத்தகைக்கு எடுத்தன. இது இந்தியாவின் மொத்த அலுவலக குத்தகையில் 44 சதவீதமாகும். இதில் 62% பெங்களூருவில் இருந்து மட்டும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் அதற்கு அடுத்தபடியாக 15 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குத்தகை நடவடிக்கைகளில் 88 சதவீதம் BFSI, சில்லறை விற்பனை மற்றும் சுகாதார துறைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
பெரு நகரம் அல்லாத நகரங்களும் ஜிசிசி மையங்களுக்கு சிறந்த தேர்வுகளாக மாறி வருகின்றன. நகர்ப்புற மையங்களுக்கு மாற்று வழிகளை சில நிறுவனங்கள் தேடுவதால் இந்த போக்கு இனிவரும் நாட்களிலும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 620-க்கும் மேற்பட்ட ஜிசிசிகள் இந்தியாவில் இந்தியாவிற்கு படையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1.9 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் ANSR அறிக்கை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications