GDP 2021: இந்திய பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் வருமா.. முக்கிய காரணிகள் என்ன சொல்கிறது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று மாலை வெளியாகவிருக்கும் ஜிடிபி குறித்து, பல சாதகமான கணிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இது வலுவான வளர்ச்சியினை எட்டலாம். இரு இலக்கில் வரலாம் என பல தரப்பிலும் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகவிருக்கும் ஜிடிபியில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவு மோசமாக பொருளாதாரம் சரிந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சியானது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனங்கள், நிபுணர்கள் என பல தரப்பினரும் சாதகமான அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரிக்கும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கியும் 21.4% ஆக வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 30 கடைசி நாள்.. இந்த 5 விஷயத்தை மறக்காமல் செய்ய வேண்டும்..! செப்டம்பர் 30 கடைசி நாள்.. இந்த 5 விஷயத்தை மறக்காமல் செய்ய வேண்டும்..!

சாதகமான கணிப்புகள்

சாதகமான கணிப்புகள்

இப்படி எதிர்பாராத அளவு வளர்ச்சியை காணலாம் என்று கணிப்புகள் வெளியாகி வரும் கணிப்புகள், பெரும் நிம்மதியை கொடுத்தாலும் இன்று வெளியாகவிருக்கும் ஜிடிபியில் நாம் எந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருக்கும் முதல் விஷயம், விவசாயம் நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாய துறை தான்.

விவசாயத் துறையில் வளர்ச்சி

விவசாயத் துறையில் வளர்ச்சி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாய துறைக்கு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லை எனலாம். ஏனெனில் பருவம் தவறி பெய்த பருவமழை, மாற்றம் கண்டு வரும் பருவ நிலையால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜிடிபியில் இதன் தாக்கம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

ஜிடிபியில் முக்கிய பங்கு வகிக்கும் உற்பத்தி துறையில் ஜூன் காலாண்டில் வளர்ச்சி விகிதம், மெதுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இது ஜூன் காலாண்டில் உற்பத்தி துறையில் 39.3% வளர்ச்சி குறைந்துள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன. இதனால் உற்பத்தி கடுமையான சரிவினைக் கண்டது. ஆக இதுவும் ஜிடிபியில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Array

Array

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் முதலீடு & உள்கட்டமைப்பு துறையில் வளர்ச்சி விகிதம் என்பது முதல் காலாண்டில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு விகிதமும் சரிவினைக் கண்டுள்ளது. கொரோனாவின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியினை சந்தித்து வந்த நிலையில் முதலீடு & உள்கட்டமைப்பு துறையிலும் சற்று வீழ்ச்சியினை கண்டது.

நுகர்வு சரிவு

நுகர்வு சரிவு

நாட்டின் வேலையின்மை விகிதம் அதிகரித்து வந்த அந்த நேரத்தில், மக்களின் வருவாய் ஆதாரம் என்பது மிக மோசமான சரிவினைக் கண்டது. இதனால் மக்களின் நுகர்வும் குறைந்தது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக விலை வாசியும் அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக நுகர்வு பெரும் சரிவினைக் கண்ட நிலையில், இதுவும் ஜிடிபியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சேவைத் துறை

சேவைத் துறை

ஹோட்டல், போக்குவரத்து, கம்யூனிகேஷன் உள்ளிட்ட சேவைகள் மோசமான சரிவினைக் கண்டன. கொரோனா காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் சேவைத் துறையும் ஒன்று. இதனால் மிக மோசமான வீழ்ச்சியினை கண்டது குறிப்பிடத்தக்கது.
எப்படியிருப்பினும் முதல் கட்ட பரவலின் போது இருந்த நாடு தழுவிய லாக்டவுன் சமயத்தில், பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டது. இதனால் நடப்பு ஆண்டில் அந்தளவுக்கு தாக்கம் இருக்காது என்பது சற்று ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gdp ஜிடிபி
English summary

GDP 2021; important things to watch out for in Q1 fy22

GDP latest updates.. GDP 2021.. important things to watch out for in Q1 fy22
Story first published: Tuesday, August 31, 2021, 18:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X