கொரோனா சவால்களுக்கும் மத்தியிலும் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 20.1% வளர்ச்சி..!

இந்தியாவின் ஜிடிபி விகிதம் கடந்த ஜூன் காலண்டில் 20.1% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஆரம்பத்தில் இருந்தே இரண்டாம் கட்ட பரவலானது பரவி வந்த நிலையில், பொருளாதாரம் என்பது சற்று சரிவினைக் கண்டு வந்தது. எனினும் கடந்த ஆண்டினை காட்டிலும் சற்று ஆறுதல் கொடுக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தான் பல மாநில அரசுகளும் முதல் காலாண்டில் கடுமையான லாக்டவுனை கடைபிடித்து வந்தன. உற்பத்தி மோசமான சரிவினைக் கண்டது. எனினும் கடந்த ஆண்டினை காட்டிலும் வளர்ச்சிகரமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை நிரூபிக்கும் விதமாக வளர்ச்சி விகிதமும் வந்துள்ளது.

முதல் காலாண்டில் வளர்ச்சி

முதல் காலாண்டில் வளர்ச்சி


இதே கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதமானது 1.6% வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சர்வதேச ஆய்வு நிறுவனங்கள், இந்திய ஆய்வு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் என பலரும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்பது முதல் காலாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என கணித்தன. இந்த நிலையில் கணிப்புகளை மெய்யாக்கும் விதமாக வளர்ச்சி விகிதமானது நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது.

ஜிவிஏ வளர்ச்சி

ஜிவிஏ வளர்ச்சி

இதற்கிடையில் ஜிவிஏ விகிதம் முதல் காலாண்டில் 18.8% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் -22.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் நிலவி வரும் கடுமையான நெருக்கடிக்கும் மத்தியில் இந்த வளர்ச்சி விகிதமானது, நாடு வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதை சுட்டி காட்டுகின்றது எனலாம்.

கடந்த ஆண்டு நிலவரம் என்ன?

கடந்த ஆண்டு நிலவரம் என்ன?

இதே கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது வரலாறு காணாத அளவுக்கு -24.4% ஆக வீழ்ச்சி கண்டது. இது நாடு தழுவிய லாக்டவுனுக்கு மத்தியில், அத்தியாவசியம் தவிர மற்ற முக்கிய தொழில்துறைகள் அனைத்தும் முடங்கின. இதற்கிடையில் பல லட்சம் பேர் வேலையினை இழந்தனர். இதனால் தேவையானது வீழ்ச்சி கண்டது. நுகர்வும் குறைந்தது. மொத்தத்தில் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. ஆனால் நடப்பு ஆண்டில் அப்படியில்லை.

கடந்தாண்டினை போன்று அல்ல

கடந்தாண்டினை போன்று அல்ல

இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கும் மத்தியிலும் லாக்டவுன் நடவடிக்கைகள் இருந்தாலும், கடுமையானதாக கடந்த ஆண்டினை போல இல்லை என்பது பெரும் ஆறுதலான விஷயமாக இருக்கும் நிலையில், இது இன்னும் வளர்ச்சிக்கு ஊக்கத்தினை அளித்தது. குறிப்பாக நடப்பு ஆண்டில் தொழிற்துறைகள் கடந்த ஆண்டினை காட்டிலும் மோசமாக இல்லை என்பதும் நினைவுகூறத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+