இந்திய பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது இருந்து வந்தாலும், தொடர்ந்து பார்க்கும்போது ஏற்றத்திலேயே காணப்படுகிறது. எனினும் நீண்ட கால நோக்கில் என வரும் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 ட்ரில்லியன் டாலரை எட்டுமா? சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளை எட்டுமா?
நிபுணர்கள் நீண்டகால நோக்கில் இந்திய சந்தைகள் நல்ல ஏற்றம் காணலாம் என கணித்து வருகின்றனர்.
அப்படி இருக்கும்பட்சத்தில் சென்செக்ஸ் எப்போது 1 லட்சம் புள்ளிகளை எட்டும்? அதன் தற்போதைய நிலவரம் என்ன? தற்போதைய பொருளாதார நிலை என்ன? இது எப்போது 5 ட்ரில்லியன் டாலரை எட்டும் வாருங்கள் பார்க்கலாம்.
தற்போதைய போக்கு எது?
இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் என்ற லெவலை 2028ல் எட்டலாம் என சில நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே சென்செக்ஸ் அடுத்த 3 - 4 ஆண்டுகளில் 1 லட்சம் புள்ளிகளை எட்டலாம் என கணித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி செக்செக்ஸின் உச்சம் 62,000 புள்ளிகளாகும். மறுபுறம் இந்திய பொருளாதாரம் 2021ல் 3.2 ட்ரில்லியன் டாலராகவும் இருந்தது.
ஜிடிபி விகிதம்
இந்தியாவின் ஜிடிபி விகிதம் 2025ல் 4 - 4.5 பில்லியன் டாலராக இருக்கும். இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளில் உபரி இருக்கும் என்றும் பி எம் எஸ் பஜார் செய்த நிகழ்வில், கார்னிலியன் கேப்பிட்டல் அட்வைசர்ஸ் நிறுவனர் விகாஸ் கெமானி கணித்துள்ளார்.
4 நாடுகள் மட்டுமே உபரி
முன்னதாக 4 நாடுகள் மட்டுமே 40 ஆண்டுகளில் ஜப்பான், சீனா, கொரியா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகள் மட்டுமே நடப்பு கணக்கில் உபரியை வைத்துள்ளன.
இந்தியாவின் செலவு அதிகரித்துள்ளது. போட்டியும் அதிகரித்துள்ளது. அதன் உற்பத்தி ஏற்றமும் உள்ளது. உற்பத்தியில் ஒரு வேலையை சேர்ப்பது, அதன் துணை சேவையில் 3 வேலைகளை உருவாக்குகிறது.
5 ட்ரில்லியன் டாலர் இலக்கு
அபாகஸ் அசெட் மேனேஜர் எல் எல் பி-யின் நிறுவனர் சுனில் சிங்கானியா, இந்தியா ஏற்றம் காணக் கூடியது. நாட்டின் இலக்கு என்பது மிகவும் தெளிவாக உள்ளது. 2027 அல்லது 2028-க்குள் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கினை எட்ட முடியும் என்றும் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தின் போக்கு
Enam AMCயின் துணை நிறுவனர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ஜிதன் டோஷி என மோடி அரசாங்கத்தின் பல சீர்திருத்தங்கள் ஜிடிபியை ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார். அதானி மற்றும் அம்பானியின் Capex இந்திய பொருளாதாரம் எங்கு செல்கிறது என்பதை காட்டுகிறது.
சென்செக்ஸ் நிலவரம்
இதே யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் சென்செக்ஸ் 3.5 ஆண்டுகளில் 1 லட்சம் புள்ளிகளை எட்டும் என கணித்துள்ளது. பணவீக்க விகிதங்களின் உச்சம், ரூபாய் மதிப்பினை ஏற்றம் காண வழிவகை செய்தல், பத்திர சந்தை என பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
எது பர்ஸ்ட்
இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருந்து வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இதற்கிடையில் மற்ற ஆசிய நாடுகளை காட்டிலும் இந்தியா அதிகளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சென்செக்ஸ் 1 லட்சமா Vs பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலரா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
More From GoodReturns

ரூ.7 லட்சம் கோடி மாயம்.. பங்குச்சந்தையில் என்ன தான் நடக்குது..?

ரத்தகளரியான பங்குச் சந்தை!20 லட்சம் கோடி காலி - முதலீட்டாளர்களின் லாப கனவு கலைந்தது எப்படி?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!



Click it and Unblock the Notifications