ஜிடிபி தரவுகள்: எந்த துறை எவ்வளவு சரிந்து இருக்கிறது?

2020 - 21 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன் 2020) இந்தியாவின் ஜிடிபி 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

1996-ம் ஆண்டில் இருந்து இந்திய அரசு, ஒவ்வொரு காலாண்டுக்கும் ஜிடிபி தரவுகளை வெளியிடுகிறது.

1996-ம் ஆண்டில் இருந்து, இப்போது வரை வெளியான இந்திய ஜிடிபி காலாண்டு தரவுகளிலேயே, இந்த ஜூன் 2020 காலாண்டில் தான், இந்தியப் பொருளாதாரம், மிக மோசமாக 23.9 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறதாம்.

ஜூன் 2019 Vs ஜூன் 2020

ஜூன் 2019 Vs ஜூன் 2020

கடந்த ஜூன் 2019 காலாண்டுடன், இந்த ஜூன் 2020 காலாண்டை ஒப்பிட்டால், உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் இந்தியா தான் மிகப் பெரிய சரிவைக் கண்டு இருக்கிறது.
இந்தியா -23.9 %
இங்கிலாந்து -21.7 %
பிரான்ஸ் -18.9 %
இத்தாலி -17.7 %
கனடா -13.0 %
ஜெர்மனி -11.3 %
ஜப்பான் -9.9 %
அமெரிக்கா -9.1 %
சீனா மட்டுமே 3.2 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.

ஜிவிஏ (Gross Value Added)

ஜிவிஏ (Gross Value Added)

ஜிடிபி-யைக் கணக்கிட மிகவும் முக்கியமான தரவாக இருக்கும் ஜிவிஏவும், ஒரு பெரிய சரிவைக் கண்டு இருக்கிறது. ஜிவிஏ-வை ஆங்கிலத்தில் Gross Value Added (GVA) என்பார்கள். இந்த ஜிவிஏ என்பதும் ஒரு உற்பத்திக் குறியீடு போலத் தான். ஜிவிஏ அதிகரித்தால் ஜிடிபியும் அதிகரிக்கும், ஜிவிஏ சரிந்தால், ஜிவிஏவும் சரியும்.

22.8 % ஜிவிஏ சரிவு

22.8 % ஜிவிஏ சரிவு

ஒரு துறையின் ஜிவிஏவில் சரிவு ஏற்பட்டு இருக்கிறது என்றால், அந்த துறைகளில் உற்பத்தி குறைந்து இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.
கடந்த ஜூன் 2019 உடன், ஜூன் 2020 ஜிவிஏ-வை (Gross Value Added) ஒப்பிட்டால், இந்தியாவின் ஜிவிஏ 22.8 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

துறை வாரியாக ஜிவிஏ

துறை வாரியாக ஜிவிஏ

ஜூன் 2020 காலாண்டில், தொழில் துறை ஜிவிஏ 38.1 % சரிந்து இருக்கிறது. சேவைத் துறையின் ஜிவிஏ 20.6 % சரிந்து இருக்கிறது. உற்பத்தித் துறையின் ஜிவிஏ 39.3 % சரிந்து இருக்கிறது.
ஜூன் 2019 உடன், ஜூன் 2020 காலாண்டுக்கான ஜிவிஏ-வை தனித் தனியாக, துறைவாரியாகப் ஒப்பிட்டுப் பார்த்தால் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

துறைகளும் சரிவுகளும்

துறைகளும் சரிவுகளும்

கட்டுமானத் துறையின் ஜிவிஏ 50.3 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, ஒளிபரப்பு போன்ற துறைகள் எல்லாம் சேர்த்து 47.0 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது ஜிவிஏ.
உற்பத்தித் துறையின் ஜிவிஏ 39.3% வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
சுரங்கம் & குவாரி துறையின் ஜிவிஏ 23.3 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

மிதமான சரிவு + ஒரே ஒரு வளர்ச்சி

மிதமான சரிவு + ஒரே ஒரு வளர்ச்சி

பொதுமக்கள் நிர்வாகம், பாதுகாப்பு, மற்ற சேவைகள் எல்லாம் சேர்த்தால் 10.3 % வீழ்ந்து இருக்கிறது.
யுடிலிட்டி சேவைகள் 7% சரிந்து இருக்கிறது.
நிதி, ரியல் எஸ்டேட், ப்ரொஃபெஷனல் சேவைகள் 5.3 % இறக்கம் கண்டு இருக்கின்றன.
விவசாயம், வனம் & மீன் வளத் துறை மட்டுமே 3.4 % வளர்ச்சி காட்டி இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+