சென்னை: பொதுத் தேர்தலுக்கு மத்தியில் நாளை மத்திய அரசு 2023 -24 ஆம் நிதியாண்டுக்கான 4வது காலாண்டின் ஜிடிபி தரவுகளையும், முழு நிதியாண்டுக்கான ஜிடிபி தரவுகளையும் வெளியிட உள்ளது. இந்த நிலையில் ஆர்பிஐ, 2024-25 ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2023-24 ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருப்பதாகவும், அரசின் மூலதனச் செலவீடுகள் மீதான கவனம், சீரான நிதி புழக்கம், ஒழுங்குமுறை நடவடிக்கை மற்றும் நிதிசார் கொள்கைகள் ஆகியவற்றால் முதலீட்டுத் தேவை வலுவாக உள்ளதே நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஏப்ரல் மாதத்துடன் துவங்கிய நடப்பு நிதியாண்டில் (2024-25) இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தனது கணிப்பை இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டதாகவும், இக்காலகட்டத்தில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்து என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் 7.0 சதவீத வளர்ச்சியை விட அதிகமாகும்.
மேலும் இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 7 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டும் இதே வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாமினல் ஜிடிபி என்றால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு மற்றும் அளிக்கப்பட்ட சேவையின் மொத்த மதிப்பாகும். இதுவே ரியல் ஜிடிபி என்றால் நாமினல் ஜிடிபி பணவீக்க அளவுக்கு அட்ஜெஸ்ட் செய்யப்பட்டுக் கணக்கிடப்பட்டவையாகும். பொருளாதார வல்லுனர்களும், முதலீட்டாளர்களும் ரியல் ஜிடிபி அளவீட்டைத் தான் நாட்டின் வளர்ச்சி அளவீடாகக் கருதுவார்கள்.
இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட போதிலும், 2024 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் அனைத்து தடைகளிலும் இருந்து தப்பித்துச் சிறப்பாகச் செயல்பட்டதாக ஆர்பிஐ தனது அறிக்கையில் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் பொருளாதார மற்றும் நிதி நிலைத்தன்மை சூழலில், சிறப்பான வளர்ச்சிப் பாதையில் செல்ல இந்தியப் பொருளாதாரம் தயாராக உள்ளது என்று ஆர்பிஐ அறிக்கை கூறுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications