பிரிட்டனை மிரட்டும் பொருளாதார மந்தநிலை இப்போ இந்தியாவையும் மிரட்டுகிறது..!

அனைத்துத் தரப்பு மக்களும் பல நாட்களாக எதிர்பார்த்து வரும் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் இன்று வெளியானது.

ஜூன் காலாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியப் பொருளாதாரம் 23.9 சதவீதம் வரையில் சரிந்தது. இதனால் முதலீட்டுச் சந்தையும், இந்திய ரூபாய் மதிப்பும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டது.

இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் குறித்து ஏற்கனவே பல கணிப்புகள் வெளி வந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் 2வது காலாண்டிலும் சரிவு பாதையில் இருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆன நிலையில், ஜூன் காலாண்டை விடவும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் -7.5 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

ஜிடிபி வீழ்ச்சி

ஜிடிபி வீழ்ச்சி

இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் -7.5 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் காலாண்டைத் தொடர்ந்து செப்டம்பர் காலாண்டிலும் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி பாதையிலேயே இருக்கும் காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் முதல் முறையாக ரெசிஷனுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

பல்வேறு பொருளாதார நெருக்கடியில் இந்திய ரிசர்வ் வங்கி high-frequency data-ஐ பயன்படுத்தி ஆய்வு செய்து முதல் முறையாக வெளியிட்டுள்ள 'Nowcast'அறிக்கையில், செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -8.6% வீழ்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஜூன் காலாண்டை விடச் சிறப்பான வளர்ச்சி அளவீடு என்றாலும், இந்தியப் பொருளாதாரம் இன்னமும் எதிர்மறை (Negative) வளர்ச்சியிலேயே உள்ளது.

 

 இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் -24 சதவீதம் வரியில் இந்தியப் பொருளாதாரம் சரிந்த நிலையில், தொடர்ச்சியாக 2 காலாண்டுகளாகப் பொருளாதாரம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தியப் பொருளாதாரம் ரிசஷனுக்குத் தள்ளப்படும் அபாயம் நிலவுகிறது.

 

 எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

செப்டம்பர் காலாண்டில் நாட்டின் தொழிற்துறை, சேவைத்துறை மற்றும் சர்வதேச பொருளாதாரத்தின் அடிப்படையில் 41 high-frequency indicator-களை அடிப்படையாக வைத்து Nowcasting முறையில் ஆய்வு செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் -10.7 சதவீதம் வரையில் மட்டுமே சரிந்திருக்கும். முன்பு 12.5 சதவீதமாகக் கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது என எஸ்பிஐ வங்கி தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா கான்டி கோஷ் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

வளர்ச்சி

வளர்ச்சி

தற்போது வெளியான கணிப்புகளின் படி இந்தியப் பொருளாதாரம் ஜூன் காலாண்டை விடவும் செப்டம்பர் காலாண்டில் 13.7 முதல் 15.3 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது -23.9 சதவீதத்தில் இருந்து - 10.7 சதவீதம் வளர்ச்சி அடையும்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் ஜூன் காலாண்டை விடவும் 57 முதல் 64 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா

கொரோனா

உலக நாடுகள் கொரோனா பாதிப்பின் 2வது தாக்குதலை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையில் இந்திய பொருளாதாரம் ரெசிஷனுக்குத் தள்ளப்படுவது நாட்டின் வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்கும். இதனால் இந்தியாவில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் உயர்வு போன்றவை முதலீட்டுச் சந்தையைப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 பிரிட்டன்

பிரிட்டன்

செப்டம்பர் காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரம் ஜூன் காலாண்டை விடவும் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. இதேபோல் ஜூன் காலாண்டை விடவும் 55.35 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. பிரிட்டன் பொருளாதாரத்தை ஒப்பிடுகையில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா

சீனா

உலகின் பல நாடுகள் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாகக் கொரோனா தொற்றின் துவக்கமாகக் கருதப்படும் சீனா செப்டம்பர் காலாண்டில் 4.9 சதவீத வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஜூன் காலாண்டிலும் சீன பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 பங்குச்சந்தை

பங்குச்சந்தை

பொருளாதாரத் தரவுகள் வெளியாவதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகச் சந்தை மிகவும் மந்தமாக உள்ளது. இதன் வாயிலாகச் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவக்கம் முதல் சரிவு பாதையிலேயே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியில் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+