அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் முன்னணி விமான எஞ்சின் சப்ளையரான GE Aerospace இன்று இந்திய விமானப் படையில் பயன்படுத்தும் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை தயாரிப்பதற்காக இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா ஆயுத உற்பத்தியில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் போர் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்களை HAL உடன் இணைந்து அமெரிக்காவின் GE Aerospace தயாரிப்பது முக்கியமான விஷயமாக உள்ளது. பிரதமரின் அமெரிக்க பயணத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்காவின் முதல் அரசு பயணத்தில் இந்த GE Aerospace - HAL மத்தியிலான ஒப்பந்தம் மிகவும் முக்கிய மைல்கல் என்று ஜீஈ ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் GE ஏரோஸ்பேஸின் F414 ரக இன்ஜின்கள் கூட்டணியில் தயாரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் Ohio-வை தலைமையிடமாகக் கொண்ட GE ஏரோஸ்பேஸ் இந்தியாவில் F414 ரக இன்ஜின்களை கூட்டணியில் தயாரிக்க தேவையான ஏற்றுமதி அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பணியாற்றுவதாக கூறியுள்ளது.

GE ஏரோஸ்பேஸ் இந்தியாவில் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது, 1986ல் இந்நிறுவனம் இந்திய ஏரோநாட்டிக்கல் வளர்ச்சி அமைப்பு மற்றும் HAL உடன் இணைந்து F404 இன்ஜின்கள் கொண்ட லைட் காம்பேக்ட் ஏர்கிராப்ட்-ஐ உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது.
தற்போது இந்திய விமான படையில் இருக்கும் Mk1A விமானத்திற்கு பயன்படுத்த 75 F404 இன்ஜின்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது, 99 இன்ஜின்களுக்கான ஆர்டர் வைக்கப்பட்டு உள்ளது. Mk2 விமானங்களில் பயன்படுத்த 8 F414 ரக இன்ஜின்கள் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது. தற்போது செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தம் மூலம் Mk2 திட்டத்திற்கு சேவையான இன்ஜின்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications