வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சமமாக நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி மீண்டும் இந்த விவாதத்தை தலையெடுக்க வைத்திருக்கிறது.
வேலை இடத்தில் Gen x (1965-1980க்குள் பிறந்தவர்கள்) , Gen Y (1980 முதல் 1996 வரை பிறந்தவர்கள்) தலைமுறை ஊழியர்களுடன் ஒப்பிடும்போது Gen Z (1997-2012 வரை பிறந்தவர்கள்) தலைமுறையினரால் அத்தனை எளிதாக தங்களை பொருத்திப் பார்க்க முடிவதில்லை. Gen Z ஊழியர்கள் வேலை இடத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவுகளை நாம் காண முடியும் . Gen Z ஊழியர்களை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என்று மேலாளர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் Gen Z ஊழியர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் சத்தாகி பாண்டே என்ற Gen Z பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் Gen x மற்றும் Gen Y தலைமுறையினர் கடின உழைப்பு என்ற பெயரில் மோசமான பணிக்கான கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை நிறுத்துங்கள் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் நான் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப தயாரானேன், அப்பொழுது என்னுடைய மேலாளர் என்னை அழைத்தார் , இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது அதை நான் உங்களுக்கு வழங்குகிறேன் அதை முடித்து விடுங்கள் என கூறினார். அதற்கு நான் இல்லை சார் நான் இன்று நேரத்திற்கு வீட்டிற்கு கிளம்பி ஆக வேண்டும் என கூறினாராம்.
வேலை நேரத்திற்கு முன்பாகவே கிளம்பவில்லை என்னுடைய வேலை நேரத்தை முடித்துவிட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு தான் கிளம்புகிறேன் என்னால் அதற்கு மேல் கூடுதல் நேரம் இருந்த வேலை பார்க்க முடியாது அது மட்டும் இல்லாமல் இன்று நான் விரதத்தில் இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் . அவருடைய இந்த பதிலுக்கு அந்த மேலாளர் உங்களுக்கு தெரியுமா நான் நேற்று ரயிலில் பயணம் செய்தேன் காலை 7 மணிக்கு தான் வீட்டிற்கே வந்தேன் 7.30 மணிக்கு அலுவலகம் வந்துவிட்டேன் தற்போது மாலை 6.30 மணி வரை வேலை செய்து கொண்டிருக்கிறேன் என கூறினாராம்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அந்த பெண் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு உண்பதற்காக தான் சம்பாதிக்கிறோம் அந்த உணவை கூட நிம்மதியாக உண்ண முடியவில்லை என்றால் அந்த வேலையில் இருந்து என்ன பிரயோஜனம் என கேள்வி எழுப்பியிருக்கிறார். என்னை வேலையை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை என்னால் இது போன்ற விஷயங்களை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை என தெரிவித்திருக்கிறார்.
கடின உழைப்பு என்ற பெயரில் மோசமான பணி கலாச்சாரத்தை ஊக்குவிக்காதீர்கள் நிறுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார் . அவருடைய இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றிருக்கிறது . பலரும் அவருடைய இந்த வீடியோவில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர். பெரும்பாலான நபர்கள் Gen Z தலைமுறையினரின் இந்த வெளிப்படையான பேச்சை ஆதரித்து இருக்கின்றனர்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications