ஆக்சிஸ் வங்கியின் டிஜிட்டல் வணிகம் மற்றும் டிரான்ஸ்ஃபார்மேஷன் தலைவர் சமீர் ஷெட்டி சமீபத்தில் திங்க் ஸ்கூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஜென்Z தலைமுறையின் எந்த அளவுக்கு கடனில் மூழ்கியுள்ளனர் என்பதை புட்டு புட்டு வைத்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இந்தியாவின் இளம் தலைமுறையான ஜென் Z, மக்கள் தொகையில் 28-30 சதவீதம் பங்கு விகிக்கின்றனர். வங்கி டெபாசிட்களில் அவர்களின் பங்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே இருக்கும் போது, பர்சனல் மற்றும் கன்ஸ்யூமர் கடன்களில் ஜென் Z மக்களின் பங்கீடு சுமார் 50 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு இளைஞர்களின் செலவு பழக்கத்தை படம் போட்டு காட்டுகிறது.

மேலும் சமீர் ஷெட்டி கூறுகையில், பல ஜென் Z இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் சேமிப்பு குறைவாக இருப்பது இயல்பு. ஆனால் அதிகரித்து வரும் நுகர்வு போக்கு முக்கியமானதாக விளங்குகிறது, அவர்கள் அதிகம் செலவு செய்வதால் வங்கி கணக்குகளில் இருப்பு குறைவாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ரூ.50,000-க்கு கீழ் உள்ள சிறு கடன்கள் மொத்த கடன்களில் சுமார் 75 சதவீதம் வரையில் ஜென் Z மக்கள் பங்கீடு வகித்த காலமும் இருந்துள்ளதாக சமீர் ஷெட்டி கூறுகிறார். இந்த சிறு கடன்கள் என்பது பெரும்பாலும் பாதுகாப்பற்ற தனிப்பட்ட கடன்கள் மற்றும் சிறு நுகர்வு கடன்களாக உள்ளன. இந்த கடன்களை வைத்து பெரும்பாலாலும் ஷாப்பிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது, அல்லது வாழ்க்கையை வாழ்வதற்காக செலவு செய்யப்படுவது வழக்கம்.
ஜென் Z மக்கள் அதிகளவில் கடன் வாங்க மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. இத்தலைமுறையினர் மத்தியில் அதிகரிப்படியான நுகர்வு அதாவது பொருட்களை வாங்கி குவிக்கும் வழக்கம் உள்ளது, அடுத்தாக கடன் எடுக்கும் மனப்பான்மை அதிகமாக உள்ளது, மூன்றாவதாக எளிதான கடன் வசதி இவர்களின் கைக்கு எட்டும் தொலைவில் உள்ளதால் இவர்கள் அதிகமாக கடன் வாங்குகின்றனர்.
இத்தலைமுறை இளைஞர்களிடம் பணத்தை விளையாட்டாக பார்க்கும் மனநிலை அதிகரித்துள்ளது.
இதை விளக்கும் வகையில் சமீர் ஒரு உதாரணத்தையும் வெளியிட்டு உள்ளார். ஆதாவது இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சந்தாதாரர்கள் சுமார் 5.8 கோடி பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் நாட்டின் மிகப்பெரிய ரியல் மணி கேமிங் தளத்தில் 26 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர், மியூச்சுவல் பண்ட்-ஐ காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம். இது இளைஞர்கள் நீண்ட கால முதலீட்டை (SIP போன்றவை) விட விரைவான லாபத்தை தேடுவதை அதிகம் விரும்புவதை காட்டுகிறது என தெரிவித்தார்.
ஜென் Z இளைஞர்கள் இந்திய மக்களின் பாரம்பரிய சேமிப்பு முறை மற்றும் செலவு செய்யும் விதிகளை மாற்றி வருகின்றனர். அவர்கள் சேமிப்பை விட கடன் பெற்று வாழ்க்கையை அனுபவிக்கவே அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் இது நீண்ட கால நிதி ஒழுக்கம், சேமிப்பு பழக்கம், செல்வ உருவாக்கம் ஆகியவற்றுக்கு ஆபத்து என்பது தான் தற்போதைய பிரச்சனை.
மில்லினியல் மக்கள் இதை கேட்டால் மனசு கட்டாயம் பதறும், இதேபோல் ஜென் Z பிள்ளைகளின் பெற்றோர்களாக ஜென் X தலைமுறையினர் பெரும்பாலும் நிரந்தர வேலை, போதுமான அளவுக்கு நிதி ஆதாரம் கொண்டு இருக்கும் காரணத்தால் ஜென் Z பிள்ளைகள் இத்தகைய மனநிலையில் உள்ளதாகவும் கருத்து நிலவுகிறது. Financial Insecurity என்ற ஒரு விஷயம் மில்லினியல் மற்றும் அவர்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications