இன்றைய வாழ்க்கையில் வொர்க் லைப் பேலென்ஸ் என்பது மிகவும் முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் ஒவ்வொரு அலுவலக நிர்வாகம் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விடவும் அவர்களிடம் இருந்து அதிகப்படியான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் அதிகப்படியான பணி சுமையை ஊழியர்கள் தலையில் வைக்கிறது.
இதை சமாளிக்க முடியாத பலர் தங்களுடைய பணியை ராஜினாமா செய்தும், போட்டி நிறுவனங்களுக்கு செல்வதும் என முடிவை எடுக்கின்றனர். அதிகப்படியான ஊழியர்கள் தங்களுக்கு அதிகமான பணி சுமை உள்ளது என்பதை கூட பேச முடியாத நிலையில் தான் உள்ளனர்.

இத்தகையை மோசமான நிலையில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் 2K கிட்ஸ் பலர் சொந்த முயற்சியில் வர்த்தகம் செய்வது முதல் முழுநேர ப்ரீலேன்சராக பணியாற்றி வருகிறார்கள். இதேவேலையில் முழு நேர பணிக்கான இன்டர்வியூ-க்கு சென்ற ஒரு 2K கிட்ஸ் HR-ஐ அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் பதில் கொடுத்துள்ளார்.
சமீரா கான் என்பவர் டிவிட்டரில் செய்த பதிவில் தான் இப்போது ஒரு Gen Z தலைமுறையினரை Intern பணிக்காக இன்டர்வியூ செய்து வருவதாகவும் அதில் ஒருவர் தனக்கு வொர்க் லைப் பேலென்ஸ் மிகவும் முக்கியம் என்றும், ஒருநாளுக்கு 5 மணிநேரத்திற்கு மேல் பணியாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளது தனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக சமீரா கான் தெரிவித்துள்ளார்.
இந்த இண்டர்வியூவில் இந்த 2K கிட் தனது MNC கலாச்சாரம் பிடிக்காது என்பதால் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றவே விரும்புவதாகவும் 5 மணிநேரம் மட்டுமே ஒரு நாளுக்கு பணியாற்ற முடியும் என கூறிய அவர் மாதம் 40000 முதல் 50000 ரூபாய் சம்பளம் வேண்டும் என டிமாண்ட் வைக்கிறார் என சமீரா கான் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் எதிர்கால உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துகளையும் சமீரா கான் தெரிவித்துள்ளார்.

சமீரா கானின் டிவிட்டர் பதிவை 2 நாளில் 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர், இந்த பதிவு காட்டுத்தீ போல பரவியதில் வியந்த சமீரா நேற்று வொர்க் லைப் பேலென்ஸ் மிகவும் முக்கியம், ஆனால் internship செய்யும் போது கற்றுக்கொள்ள வேண்டியது, வளர்ச்சி, நல்ல ப்ராஜெக்ட்களில் பணியாற்றுவது, நல்ல அலுவலக நட்பை பெறுவதில் தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சமீரா கான் inFeedo என்னும் நிறுவனத்தில் People Success பிரிவின் தலைவராக உள்ளார். இதுமட்டும் அல்லாமல் கோவா-வில் Cafe Goldspot-ன் நிறுவனராகவும் உள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications