இன்றைய காலகட்டத்தில், பங்குச் சந்தை முதலீடுகளில் ஜென் Z தலைமுறையினர் காட்டும் ஆர்வம், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. 2023-ஆம் ஆண்டு இறுதியில் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சுமார் 1.7 கோடி பேர் புதிய பதிவு செய்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் ஜென் Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இந்தப் பதிவில் முதலீட்டு முடிவுகளை எடுப்பதில் சிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினரா? அல்லது அவர்களுடைய பெற்றோரா? என்பதை விரிவாக பார்ப்போம்.

யார் இந்த ஜென் Z தலைமுறையினர்?: 1997-ஆம் ஆண்டுக்கு பின் 2012 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்களைத் தான் ஜென் Z தலைமுறையினர் என்று அழைக்கிறோம்.
2008-ஆம் ஆண்டு நிதி நெருக்கடியையும், 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நெருக்கடியையும், அதனைத் தொடர்ந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையையும் ஜென் Z தலைமுறையினர் கண்டிருக்கிறார்கள்.
அதோடு மட்டுமில்லாமல் பணமதிப்பழிப்பு போன்றவற்றையும், யுபிஐ வளர்ச்சி என இந்தியாவில் நடந்த பெரு மாற்றங்களை ஜென் Z தலைமுறையினர் எதிர்கொண்டுள்ளனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஜென் Z தலைமுறையினர் பல்வேறு பொருளாதார ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளனர்.
பெற்றோரின் கருத்து: பெற்றோர்கள் பாரம்பரிய முதலீடு முறைகளையே நம்புகின்றனர். நிலம், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்து, ஓய்வுகாலத்திற்கு பணத்தை சேமித்து வைப்பதே அவர்களின் முதலீட்டு உத்தி. இதனால் அதிக ரிஸ்க் கொண்ட பங்குச் சந்தை முதலீடுகளை அவர்கள் பெரிதாக நம்பவில்லை. இதன் காரணமாக பெற்றோர் ஜென் Z தலைமுறையினரின் முதலீட்டு முறைகளை சற்று சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றனர்.
ஆனால் இப்போதுள்ள இந்த ஜென் Z தலைமுறையினர் விரைவாக ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக செல்வத்தை சீக்கிரம் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். மேலும் YOLO (ஒரு முறைதான் வாழ்க்கை) என்ற கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கையை அனுபவிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
Gen Z, தலைமுறையினர் உத்தரவாதமே இல்லாத எதிர்காலத்திற்காக அவர்கள் தற்போதய ஆசைகளை வீட்டுக் கொடுக்க விரும்புவதில்லை. அப்படியென்றால், முதலீடு செய்வதில் அவர்கள் என்ன செய்கிறார்கள், பெற்றோரை விட அவர்களுக்கு அதிகம் தெரியுமா?
இன்றைய ஜென் Z தலைமுறையினர் முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இன்டர்நெட் வழியாக எல்லா தகவல்களையும் கூர்ந்து கவனிக்கின்றனர். சமூக வலைதளங்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் வழிகாட்டிகள் ஆகியவை அவர்களுக்கு முதலீட்டில் நிறைய அனுபவ அறிவுரைகளை வழங்குகின்றன.
ஆனால் அதிக அளவிலான தகவல்களால் சூழப்பட்டுள்ளதால், இதை வைத்து எந்த ஒரு நல்ல முதலீட்டு முடிவுகளையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக (FOMO - Fear of Missing Out) அச்சத்தோடு அதிக ரிஸ்க் எடுக்கும் தன்மை கொண்டவர்களாகவும் மாறிவிடுகின்றனர்
கடனில்லாமல் வாழ வேண்டும் என்ற ஆசை: அதிக கடன்களை வாங்கி EMI சுமையில் சிக்கித் தவிப்பதை ஜென் Z தலைமுறையினர் விரும்பவில்லை. பத்தாண்டுகளாக கடன் வாங்கி வீடு வாங்குவதை விட வாடகை வீட்டில் இருப்பதே சிறந்தது என்று இணையத்தில் ஏராளமான காணொளிகள் கிடைக்கின்றன. வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய அதிகப்படியான வட்டிச் செலவையும் இந்த காணொளிகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் கருத்து என்று பார்த்தால், சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதாகவே உள்ளது.
ஜென் Z தலைமுறையினர், முதலீட்டில் வழிகளைத் தேடும் அதே வேளையில், நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெறுவது அவசியம். இணையத்தின் வழிகாட்டுதலோடு, அனுபவம் வாய்ந்த நிதி ஆலோசகர்களின் ஆலோசனைகளையும் பெறுவதன் மூலம் சீரான முதலீட்டு முடிவுகளை எடுத்து, தங்கள் நிதி இலக்குகளை அடைய முடியும்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications