ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவன முதலீட்டாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் ஜெனரேட்டிவ் ஏஐ என்பது தொழில்நுட்ப சுழற்சி மட்டும் கிடையாது இது ஒரு நாகரிக மாற்றம் எனக் கூறியிருக்கிறார்.
டிசிஎஸ் நிறுவன பங்குதாரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கும் அவர், 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு சக்தியாக ஜெனரேட்டிவ் ஏஐ இருந்தது என குறிப்பிட்டுள்ளார். மனித சிந்தனைக்கு மிக நெருக்கமான ஒரு திறன் கொண்ட தொழில்நுட்பமாக ஜெனரேட்டிவ் ஏஐ உருவாகி இருக்கிறது இது ஒரு தொழில்நுட்ப சுழற்சி மட்டுமல்ல இது ஒரு நாகரிக மாற்றம் என தெரிவித்திருக்கிறார்.

செமி கண்டக்டர், கிளவுட் கம்ப்யூட்டிங் , குவாண்டம் தொழில்நுட்பம் ,ரோபோடிக்ஸ் மற்றும் எரிசக்தி துறையில் புதிய கண்டுபிடிப்புகள் என பல்வேறு துறைகளும் இந்த ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தால் பெரிய மாற்றம் கண்டு இருக்கிறது என என்.சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார். ஜெனரேட்டிவ் ஏஐ ஏற்கனவே தரவு பகுப்பாய்வு ,வாடிக்கையாளர் சேவை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் எல்லாம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் தானாகவே செயல்படக்கூடிய ரோபோக்கள் மற்றும் ஏஐ ஏஜென்ட்களை இனி அதிகம் பார்க்கலாம் என கூறுகிறார்.
குறிப்பாக தொழிற்சாலைகளில் இத்தகைய ரோபோக்கள் செயல்பாடு அதிகமாகவும், நிறுவனங்களில் எல்லாம் ஏஐ ஏஜெண்ட்களின் செயல்பாடுகள் இனி அதிகரிக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். டிசிஎஸ் நிறுவனம் பல்வேறு பிரிவுகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்து செயல்படுத்தி வருகிறது என கூறி இருக்கும் அவர் இந்த துறையிலேயே அதிக அளவு ஏஐ பயிற்சி பெற்ற பணியாளர்கள் கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் செயல்படுகிறது என சுட்டிக்காட்டி உள்ளார். கூடிய விரைவில் டிசிஎஸ் நிறுவனம் மனிதர்களோடு இணைந்து பணியாற்றும் வகையில் ஏஐ ஏஜென்டுகளை அதிகரிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் மனிதர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் திறன் ஆகிய இரண்டையும் இணைத்து புதிய தயாரிப்புகளையும் தீர்வுகளையும் வழங்குவது, டேட்டா மையங்கள் மற்றும் கிளவுட் உள் கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்தார். ஐடி மற்றும் அது சார்ந்த தொழில் சேவைகள் அனைத்துமே தானியங்கு செயல்முறை நோக்கி நகர்கின்றன என்பதுதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை நமக்கு உணர்த்துகிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் ஏஐ காரணமாக மென்பொருள் மேம்பாடு, மென்பொருள் பயன்பாடு உள்ளிட்டவை பெரிய மாற்றம் கண்டு இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
2025 ஆம் தேதியானில் டிசிஎஸ் நிறுவனம் 30 பில்லியன் டாலர்கள் வருவாய் என்ற புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது என்றும் அவர் பங்குதாரர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications