பொதுத்துறை வங்கி ஊழியர்களை தொடர்ந்து, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும், எல் ஐ சி ஊழியர்களும் இரு நாட்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
இது குறித்த அறிவிப்பில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் எல் ஐ சி ஊழியர்களும் இணைந்து மார்ச் 17 மற்றும் மார்ச் 18 அன்று போராட்டம் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வேலை நிறுத்தமானது எல்ஐசி பங்கு விற்பனை எதிர்த்து செய்யப்படவுள்ளது.
இரு நாட்கள் வேலை நிறுத்தம்
அரசு நிதி திரட்டும் பொருட்டு எல் ஐ சி நிறுவனத்தின் பங்குகளை பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் விற்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு பட்ஜெட் 2021 - 22ல் இலக்கினையும் நிர்ணயித்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மார்ச் 17 அன்று பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும், மார்ச் 18 அன்று எல் ஐ சி ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே போராட்டம்
நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கு மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், எல்.ஐ.சி. தனியார்மயமாக்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அதன் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே சில முறை போராட்டத்தில் குதித்தன.
எல் ஐ சி போன்ற வளர்ச்சி அடைந்த நிறுவனத்தை பங்கு முதலீட்டில் ஏன் கொண்டு வர வேண்டும்? சுமார் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு கொடுப்பதன் மூலம் எல்ஐசி-யில் தனியாரின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.
அரசு பரிசீலனை செய்ய வேண்டும்
எல்.ஐ.சி. பொது மக்களின் சொத்தாகும். இது மக்கள் இயக்கமாக மாற எதிர்க்க வேண்டும். பாலிசிதாரர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல கருத்துகளை வலியுறுத்தி இந்த போராட்டங்களை ஊழியர்கள் செய்யவுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் போராட்டம்
ஏற்கனவே மார்ச் 15 மற்றும் மார்ச் 16 அன்று பொதுத்துறை வங்கிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கூறியதுபோல பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால், வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலைக்கு தள்ளப்படலாம் என வங்கி ஊழியர் சங்கங்கள் அஞ்சுகின்றன. இதனால் மத்திய அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வங்கிகள் ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையிலேயே வங்கி ஊழியர் சங்கங்கள் வங்கி போராட்டத்தினை கையிலெடுத்தன.
அரசுக்கு வேண்டுகோள்
எல்.ஐ.சி நிறுவன பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, எல்.ஐ.சியை தனியார்மயமாக்குவது, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49%ல் இருந்து 74% உயர்த்துவது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் வளர்ச்சி திட்டங்களில் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு பெரிதும் பாதிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தினை அறிவித்துள்ள நிலையில், அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இங்கு அனைவரின் கோரிக்கையாகும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications