சமீபத்திய காலமாகவே தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது ஜெனரல் மோட்டார் நிறுவனம் செலவு குறைப்பின் ஒரு பகுதியாக நூற்றுக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
யார் யார் பணி நீக்கம்?
இந்த பணி நீக்க நடவடிக்கையில் நிர்வாக அடிப்படையிலான ஊழியர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது செலவுகளை குறைப்பதன் மூலம் செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதாகவும் தெரிகிறது.
சர்வதேச அளவில் இருக்கும் இந்த பணி நீக்க நடவடிக்கையில் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
$2 பில்லியன் செலவு குறைப்பு திட்டம்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான ஆர்டன் ஹாப்மேன் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், டெடராய்ட் வாகன உற்பத்தியாளர் 2 பில்லியன் டாலர் அளவுக்கு செலவு குறைப்பை செய்ய திட்டமிட்டுள்ளது. அதுவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நடவடிக்கையை அமல்படுத்தவும், செலவை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
எவ்வாறெல்லாம் குறைக்க முடியும்?
ஆக நாங்கள் எப்படி செலவினை குறைக்க முடியுமோ அந்த வகையில் குறைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான வழிகளை கண்டுபிடித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதமே இந்த செலவு குறைப்பு நடவடிக்கை குறித்து ஜெனரல் மோட்டார் அறிவித்தது. ஆனால் அப்போது எந்த பணி நீக்கம் குறித்தும் திட்டமிடவில்லை.
பங்கு விலை சரிவு
இந்த எங்களின் ஒட்டுமொத்த அமைப்பும் இந்த செலவு குறைப்பினை ஆதரிக்கிறது. எங்களின் போட்டி நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் என்பது மேம்பட்டு வரும் சூழலில், நாம் இதுபோன்று செயல்படுவதும், நமது செயல்திறனை மேம்படுத்துவதும் அவசியமான ஒன்று. ஜெனரல் மோட்டார்ஸின் இந்த நடவடிக்கை குறித்து தகவல்கள் வெளியான நிலையில், இப்பங்கின் விலையானது 1.5% சரிவினைக் கண்டுள்ளது.
இது அவசியமான ஒன்று
நாம் நமது செயல்பாடுகளில் பொறுப்பாக செயல்படும்போது தான் நமது இலக்கினை அடைய முடியும். இது அதிக செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இம்மாத தொடக்கத்தில் போர்டு மோட்டார் நிறுவனம் ஐரோப்பாவில் வேலை குறைப்பினை செய்தது. இது பல்வேறு துறைகளில் 3800 பேரை பணி நீக்கம் செய்தது.
இதுவும் பிரச்சனை
ஏற்கனவே தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் மெதுவான வளர்ச்சி கண்டு வரும் நிலையில், மூலதன பொருட்கள் விலையால் வாகன உற்பத்தி செலவு என்பது சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாகன விலையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நிலவி வரும் சர்வதேச பிரச்சனை காரணமாக விற்பனையும் சரியலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. ஆக இது மேற்கோண்டு செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு அதிக பணி நீக்கத்திற்கு வழிவகுக்கலாம். இது மேலும் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வழிவகுக்கலாம். ஆக இது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருவதை பார்க்கலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications