இந்திய ஐடி சேவை நிறுவனங்களும், ஊழியர்களும் கடந்த சில மாதங்களாகவே சில விதமான அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர். வருடாந்திர சம்பள உயர்வு வரும் நேரத்தில் ஐடி சேவை நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஒருபக்கம் வெளிநாட்டு ஐடி சேவை நிறுவனங்களான அக்சென்சர், காக்னிசென்ட் ஆகியவை ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளை குறைக்க பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதனால் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைந்த வேளையில் டிசிஎஸ் நிறுவனத்தின் 10 வருட டிரான்ஸ்அமெரிக்கா டெக் சேவை ஒப்பந்தம் முன்கூட்டியே முடித்துக்கொண்டு ரத்து செய்துள்ளது பெரும் அதிர்ச்சி கொடுக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்கள் AI துறைக்குள் நுழைந்தது மூலம் அதிகப்படியான வர்த்தகம், வருவாய், வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் கூறப்பட்டது. அதேநேரத்தில் AI எழுச்சி காரணமாக இந்திய ஐடி சேவை நிறுவனத்தில் சுமார் 60000 ஊழியர்கள் தங்களுடைய பணியை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்திய ஐடி சேவை வர்த்தக சந்தை குறித்து வெளியான ஆய்வில் சுமார் 5.4 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றும் இந்திய ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவு துறையின் எழுச்சி காரணமாக சேல்ஸ் மற்றும் சப்போர்ட் பிரிவில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 1 சதவீதம் பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட உள்ளது என தெரிய வந்துள்ளது.
245 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடி சேவை துறையில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் சேல்ஸ் மற்றும் சப்போர்ட் அணியில் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 50000 முதல் 60000 வரையிலான ஊழியர்கள் அடுத்த 3 முதல் 5 வருடத்தில் AI எழுச்சி காரணமாக தங்களது ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர் என ஐடி மார்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனமான UnearthInsight வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து UnearthInsight நிறுவனர் மற்றும் சிஇஓ-வான கௌரவ் வாசு கூறுகையில், 60000 ஊழியர்களின் வேலையை AI செய்யும் என்பது இல்லை, சேல்ஸ் மற்றும் சப்போர்ட் அணியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இனி வரும் காலத்தில் அதிகளவில் AI தொடர்புடைய தொழில்நுட்பத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் முதலில் AI தொழில்நுட்பத்தை முதலில் செலவுகளை குறைக்கும் கருவியாக தான் பயன்படுத்தும். நீண்ட கால அடிப்படையில் ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய BPO சேவை உடன் AI தொழில்நுட்பம் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications