இந்தியாவை சேர்ந்த டெக்னாலஜி, டேட்டா மற்றும் ஏஐ சேவைகளை வழங்க கூடிய ஒரு நிறுவனம் திடீரென தங்கள் ஊழியர்களுக்கு பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஊழியர்களிடம் முறைப்படி எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல், ஊதிய உயர்வு உள்ளிட்ட எதையும் வழங்காமல் திடீரென வேலை நேரத்தை மட்டும் உயர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
Work life balance எனப்படும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் சமமாக நேரம் ஒதுக்குவது தொடர்பாக இந்தியாவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. பணி அழுத்தம் தாங்காமல் சில ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து , ஊழியர்கள் தங்கள் குடும்பத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.ஆனால் நிறுவனங்கள் முற்றிலும் அதற்கு மாறாக செயல்பட தொடங்கி இருக்கின்றன.

ஜென்பேக்ட் எனப்படும் நிறுவனம் திடீரென தங்கள் ஊழியர்களுக்கு 10 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் ஜூன் மாதம் மத்தியிலிருந்து இந்த வேலை நேரம் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளார்களாம். நிறுவனத்தின் வேலைக்கான இணையதளத்தில் ஒரு ஊழியர் குறைந்தது 10 மணி நேரம் ஆக்டிவாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறதாம்.
வேலை நேரம் உயர்த்துவது தொடர்பாக தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் உள்ளிட்ட எதையும் அனுப்பவில்லை வாய்வழி உத்தரவுகளாகவே இதை நடைமுறைப்படுத்தி உள்ளனர் என அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தெரிவித்து இருக்கிறார்களாம் ஊழியர்கள் பத்து மணி நேர வேலையை முறையாக பின் தொடரவில்லை என்றால் அவர்களுக்கு முன்னெச்சரிக்கை மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறதாம்.
இந்த வேலை நேரம் நீட்டிப்பு நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு ஊழியர்களும் எக்ஸ், லிங்குடின், ரெடிட் தளங்களில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஒரு பயனர் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வேலை செய்வது ஒரு ஊழியரின் கிரியேட்டிவிட்டியை குறைத்துவிடும் என கூறியுள்ளார். ஒரு பயனர் 10 மணி நேரம் வேலை பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்தால் அந்த நாளே முடிந்து விடும் எனக் கூறியிருக்கிறார்.
அண்மையில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில் இந்தியாவை சேர்ந்த 50 சதவீதத்துக்கும் அதிகமான தொழில் நிபுணர்கள் வேலைசார்ந்து அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தெரிவித்திருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications