புதிய தொழில்நுட்பங்களை சார்ந்த பசுமை எரிசக்தி துறையில் முன்னணியில் இருந்த ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு எதிராக இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிறுவனம் வணிக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை எட்டியிருந்தாலும், அதன் முக்கிய ப்ரோமோட்டர்களான அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனீத் சிங் ஜக்கி ஆகியோர் நிறுவன நிதியை தனிப்பட்ட நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு பங்கு சந்தை மற்றும் நிர்வாக அதிகாரங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜென்சோல் இன்ஜினியரிங் ஒரு பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறிப்பாக சூரிய EPC திட்டங்கள், மற்றும் மின்சார வாகனங்களை வாடகைக்கு வழங்கும் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. 2017 முதல் 2024 வரையிலான ஏழு ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் வருமானம் ரூ.61 கோடியில் இருந்து ரூ.1,152 கோடியாக உயர்ந்தது. இதேபோல் அதன் நிகர லாபமும் ரூ.2 கோடியிலிருந்து ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சி எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தியபோது, ப்ரோமோட்டர்கள் வைத்திருக்கும் உரிமை 70.72% (FY20) முதல் 35% (FY25) வரை வீழ்ந்துள்ளது. இது நிறுவனம் மீது இருக்கும் நம்பிக்கையின் குறைவை குறிக்கிறது என்று SEBI குறிப்பிட்டுள்ளது.
SEBI தனது விசாரணையில், ஜென்சோல் நிறுவனத்தின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடித்தது. முக்கியமாக, நிறுவனம் ரூ.975 கோடி கடனை IRDEA மற்றும் PFC போன்ற அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளது. இது மின்சார வாகனங்கள் வாங்கும் நோக்கத்திற்காக இருந்தது. இருப்பினும், அந்தத் தொகையில் ஒரு பகுதி மட்டுமே அதன் அசல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.
அதற்கு பதிலாக, சுமார் ரூ.200 கோடி ஒரு கார் டீலர்ஷிப் வாயிலாக அனுப்பப்பட்டு, பின்னர் ப்ரோமோட்டர்களின் தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்கு மாறியது. இந்த தொகையில் ஒரு பகுதி விலையுயர்ந்த சொத்துகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த நிறுவனத்தின் நிதி ஒரு தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுவது போல் தோன்றுகிறது என்றும் SEBI குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிகழ்வுகள், மற்றும் அதன் தாக்கங்களால் ஜென்சோலின் பங்கு இந்த ஆண்டு மட்டும் சுமார் 83% மதிப்பிழந்துள்ளது. இதனால் ஏராளமான சில்லறை முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும், சமீபத்தில் நிறுவனம் 1:10 பங்குப் பங்கீடு (stock split) அறிவித்திருந்தது. இது கூடுதல் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலையம் மற்றும் உள்ளமைப்புகளின் பலவீனத்தை கருத்தில் கொண்டால், இது மேலும் முதலீட்டாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும் என SEBI கூறியுள்ளது.
SEBI வெளியிட்ட இடைக்கால உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள், நிறுவன நிதி தனிப்பட்ட நோக்கங்களுக்காக மாற்றப்பட்டது. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளுக்கு தவறான மற்றும் தவிர்க்கப்பட்ட தகவல்களை வழங்கினர். விலையுயர்ந்த சொத்துகள், தனிப்பட்ட நிறுவனங்களை நிதியளித்தல் போன்றவை. நிறுவனத்தில் நிதி ஒழுங்குகள் மீறப்பட்டுள்ளன. நிறுவனம் மீது உள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டுகிறது.
இந்த விசாரணையின் அடிப்படையில், SEBI இடைக்கால உத்தரவாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை, அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனீத் சிங் ஜக்கி பங்குச் சந்தையில் பங்கேற்கக்கூடாது. அவர்கள் எந்த பட்டியலிடப்பட்ட நிறுவனத்திலும் இயக்குநராகவோ, முக்கிய நிர்வாக பதவிகளில் இருப்பதற்கோ தடை. பங்கு விலையைக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தால், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை.
SEBI தனது உத்தரவில், "விளம்பரதாரர்கள் ஒரு பட்டியலிடப்பட்ட பொது நிறுவனத்தை ஒரு தனியுரிமை நிறுவனம் போல நடத்தி வந்தனர்" எனக் குறிப்பிட்டுள்ளது. இது பங்குதாரர்களின் நம்பிக்கையை பாதிக்கப்படக் கூடியது. தனிப்பட்ட லாபத்திற்காக நிறுவன நிதிகளைப் பயன்படுத்துவது, அந்த நிறுவனத்திற்கே விரோதமான சூழலை உருவாக்கியுள்ளது.
நிறுவனத்தின் சார்பாக இதுவரை அதிகாரப்பூர்வ பதில்கள் இல்லை. ஆனால் சந்தை வல்லுநர்கள் இந்த நடவடிக்கையை முதலீட்டாளர்களின் நலனுக்காக தேவையான ஒன்றாகக் காண்கிறார்கள். இந்த வழக்கு மற்ற நிறுவனங்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கையை மீட்டெடுப்பது மற்றும் நிதி ஒழுங்குகளை உறுதி செய்வது, ஜென்சோலின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அவசியமானதாகும்.


Click it and Unblock the Notifications