இந்தியாவின் அண்டை நாடா நேபாளத்தில் தங்கட்கிழமை காலை விடிந்ததும் மக்கள் போராத்திற்கு மத்தியில் விடித்துள்ளது. தலைநகர் காட்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக Gen Z மக்கள் சற்றும் எதிர்பாராத விதமாக தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது சமுக வலைத்தளம் தடை செய்யப்பட்ட உத்தரவு தான்.
நேபாள அரசு 26 பிரபலமான சமூக ஊடகங்களை தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில், காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 16 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஹிமாலயன் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டங்கள் பெரும்பாலும் ஜெனரேஷன் இசட் இளைஞர்களால் வழிநடத்தப்பட்டவை என்பதால் உலகளவில் இந்த போராட்டம் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. சமூக ஊடக தடை மட்டுமின்றி, நாட்டில் ஆழமாக வேரூன்றிய ஊழலை எதிர்த்தும் இந்த போராட்டக்கார்கள் குரல் கொடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்தின் தொடக்கம்
திங்கள்கிழமை காலை 9 மணியளவில், காட்மாண்டுவின் மைதிகர் (Maitighar) பகுதியில் போராட்டக்காரர்கள் கூடினர். ஹமி நேபாள் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காட்மாண்டு மாவட்ட நிர்வாக அலுவலகத்திடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்கள் "ஊழலை மூடுங்கள், சமூக ஊடகங்களை அல்ல" போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியபடி நகரம் முழுவதும் ஊர்வலம் சென்றனர். இந்த நிகழ்வு சமூக ஊடக தடையை மையமாகக் கொண்டிருந்தாலும், அரசின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது.
சமூக ஊடக தடையின் காரணங்கள்
வியாழக்கிழமை அன்று, நேபாள அரசு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தடை செய்தது. இந்த தளங்கள் அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்யாததே இதற்கு காரணம். பதிவு செய்ய நேபாள அரசு ஆகஸ்ட் 28 முதல் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் மெட்டா-வின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஆல்பாபெட்-ன் யூடியூப், எக்ஸ், ரெடிட், லிங்க்ட்இன் போன்ற நிறுவனங்கள் எதுவும் விண்ணப்பம் சமர்ப்பிக்கவில்லை. இதனால் 26 செயலிகளும் தளங்களும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட சமூக ஊடகங்கள்
நேபாள அரசால் தடை விதிக்கப்பட்ட 26 தளங்களில் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ்அப், எக்ஸ், லிங்க்ட்இன், ஸ்னாப்சாட், ரெடிட், டிஸ்கார்ட், பின்டரெஸ்ட், சிக்னல், த்ரெட்ஸ், வீசாட், குவோரா, டம்ப்ளர், க்ளப்ஹவுஸ், மாஸ்டோடன், ரம்பிள், விகே, லைன், இமோ, Zalo, soul, ஹம்ரோ பாட்ரோ ஆகியவை அடங்கும்.
இதற்கு மாறாக, வைபர், டிக்டாக், வீடாக், நிம்பஸ் போன்ற செயலிகள் அந்நாட்டின் அரசில் பதிவு செய்ததால் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டன. டெலிகிராம், க்ளோபல் டைரி போன்றவை பதிவு செயல்முறையில் உள்ளன.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள்
சமூக ஊடக தடை போராட்டத்துக்கான தூண்டுதலாக இருந்தாலும், அது ஒரே காரணம் அல்ல என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். 24 வயது மாணவர் யுஜன் ராஜ்பந்தாரி, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "நேபாளத்தில் ஊழல் முக்கிய பிரச்சனையாக உள்ளது. அதனால்தான் நாங்கள் போராடுகிறோம்" என்றார்.
சமீப நாட்களில் நேபாளத்தில் #நெபோகிட், #நெபோபேபீஸ் போன்ற ஹேஷ்டேக்கள் ஆன்லைனில் பிரபலமடைந்துள்ளன. இவை கேபி சர்மா ஒலி அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் உருவாகின. இதுவும் 26 செயலிகள் தடை செய்யப்பட காரணமாகும்.
அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பனேஸ்வர், சிங்கதுர்பார், நாராயண்ஹிதி உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பதற்றம் அதிகமாக இருக்கும் பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு டிக்டாக் தடை விதிக்கப்பட்டபோது, அந்த தளம் நேபாள விதிமுறைகளுக்கு இணங்கிய பிறகு ஆகஸ்ட் மாதம் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications