இன்று வேலைவாய்ப்பு சந்தையும் சரி, மக்களும் சரி அதிகளவில் மாறியுள்ளனர். முன்பெல்லாம் ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மத்தியிலான ஒரு உறவு இருக்கும், ஆனால் இப்போது அப்படிப்பட்ட உறவை மிகவும் சில நிறுவனங்களில் மட்டுமே காண முடிகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இத்தகைய உறவை பார்ப்பது மிகவும் அரிது.
இதனால் ஒரு நிறுவவனத்தில் பணியாற்றும் கால அளவு பெரிய அளவில் குறைந்துள்ளது, 70 களில் பிறந்தவர்கள் அசால்டாக ஒரு நிறுவவனத்தில் 15 முதல் 20 வருடம் வரையில் பணியாற்றுவதை பார்க்க முடியும். இதேபோல் 1985 முதல் 1995 வரையில் பிறந்தவர்கள் கிட்டத்தட்ட 10 வருடம் வரையில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதை பார்க்க முடியும்.

ஆனால் 2000 ஆம் ஆண்டுக்கு மேல் பிறந்தவர்கள் 1 வருடத்தில் 2 வருடத்தில் பணிகளை அடிக்கடி மாற்றும் பழக்கத்தை கொண்டு உள்ளனர். இது மட்டும் அல்லாமல் இன்றைய தலைமுறையினர் அனைவரும் வொர்க் லைப் பேலென்ஸ்-க்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த நிலையில் இந்திய Gen Z மக்கள் குறித்து முக்கியமான ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பொருளாதார நிலையும், வேலை செய்யும் கலாச்சாரமும் மாறியுள்ள நிலையில் பெரும்பாலான Gen Z மக்கள் தங்களுடைய கரியர் அதாவது வேலைவாய்ப்பை மாற்ற வேண்டும் என திட்டமிட்டு வருவதாக இந்த ஆய்வுகள் கூறுகிறது. 90ஸ் கிட்ஸ்-ஐ காட்டிலும் 2K கிட்ஸ் மிகவும் வேகமாக மாறும் தொழில்நுட்ப காலத்தில் உள்ளனர் என்பதை மறக்க கூடாது.
இந்த நிலையில் Pearson Skills Outlook ஆய்வில் Gen Z மக்கள் தற்போது செய்யும் வேலைவாய்ப்பை உதரி தள்ளிவிட்டு புதிய திறன் அல்லது கல்வியை பெற்று மாற்று வேலைவாய்ப்புகளை தேடும் திட்டத்தில் உள்ளனர். மேலும் Gen Z மக்கள் மிகவும் ஆக்டிவாக புதிய வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகிறது. காரணம் இவர்கள் தற்போது செய்யும் வேலைவாய்ப்பு நம்பிக்கையானதாக இல்லை என நம்புகின்றனர்.

இப்படி இந்த ஆய்வில் பங்கு பெற்ற மக்களில் 88 சதவீத Gen Z மக்கள் புதிய வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். இதேபோல் மில்லினியல் மக்கள் பிரிவில் 67 சதவீதம் பேர் புதிய வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். மேலும் Gen X பிரிவில் 55 சதவீத மக்கள் புதிய வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். கடந்த 3 வருடத்தில் ஏற்பட்ட பொருளாதாரம், வர்த்தகம், டெக்னாலஜி மாற்றங்கள் அடிப்படையில் புதிய வேலைவாய்ப்புகளை தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Gen Alpha - 2010 முதல் 2020 வரையில் பிறந்தவர்கள். இவர்கள் அனைவரும் மில்லினியல் மக்களின் குழந்தைகள் அல்லது வயதான GenZ மக்கள்
Gen Z - 1997 முதல் 2012 வரையில் பிறந்தவர்கள்
மில்லினியல் அல்லது Gen Y- 1981 முதல் 1996 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள்
Generation X - 1965 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள்
Baby Boomers - 1946 முதல் 1964 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள்
Silent Generation - 1928 முதல் 1945 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள்
Greatest Generation - இவர்கள் ரொம்பவும் ஸ்பெஷல். மாடர்ன் பொருளாதாரத்திற்கு வித்திட்டவர்கள். 1901 முதல் 1927 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள்
Lost Generation - 1883 முதல் 1900 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள்
இது வெறும் பிறப்பு காலம் மட்டும் இல்லை, வர்த்தகம், பொருளாதாரம் மாறும் வேகத்தை குறிக்கும் அளவீடு. உதாராணமாக Gen Z மற்றும் மில்லினியல் மத்தியிலான வேலைவாய்ப்பு விருப்பம் முதல் பொருட்களை வாங்குவது வரையில் மாறுபடும். இவர்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருள் Gen Z-க்கு விற்க முடியாது.
இதேபோல் முதலீட்டு பழக்கம், கடன் வாங்கும் பழக்கம், பணத்தை செலவு செய்யும் பழக்கம் என அனைத்தும் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை கொண்டு உள்ளது. அமெரிக்காவில் Gen Alpha மற்றும் Gen Z மக்களை அடிப்படையாக வைத்து தான் ஒட்டுமொத்த டிஜிட்டல் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தக சந்தை மேம்படுத்தப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications