இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகளாவிய புவிசார் அரசியல் பிரச்சனைகள் முதலீட்டு சந்தைக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளதாக எச்சரித்துள்ளன. போர், வர்த்தக பதற்றங்கள், பயங்கரவாதம் போன்றவை எல்லை தாண்டிய வர்த்தகம், முதலீடுகளை பாதித்து, சொத்து விலைகளை குறைக்கின்றன.
இது வங்கிகள், நிதி நிறுவனங்களை பாதித்து, தனியார் கடனளிப்பு அளவுகளை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை தடுக்கிறது. IMF-ன் கூற்றுப்படி, சர்வதேச ராணுவ மோதல்கள் இந்தியா போன்று வளர்ந்து வரும் சந்தைகளின் பங்குகளை கடுமையாக பாதிக்கின்றன என அடித்து சொல்கிறது. இஸ்ரேல் - ஈரான் போரின் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1350 புள்ளிகள் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்பிஐ டேட்டா: 2021 முதல் உலகளாவிய புவிசார் அரசியல் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது என ஆர்பிஐ புள்ளி விபரம் காட்டுகிறது. இதேபோல் இத்தகைய பிரச்சனை வெடிக்கும் போது சர்வதேச பங்குசந்தை முதலீட்டு மதிப்பு கடுமையாக பாதித்து வருகிறது. 2015 பாரீஸ் அட்டாக் துவங்கி இன்று இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் வரையில் அவ்வபோது போர் அச்சமும், உள்ளாட்டு கலவரமும் வெடித்துக்கொண்டு இருக்கிறது.
இது இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை உருவாக்கலாம். இதனால், முதலீட்டாளர்கள் பயத்துடன் முதலீடுகளை விற்க வேண்டியதில்லை. புவிசார் அரசியல் அபாயங்கள் காரணமாக சந்தை சரிவு ஏற்பட்டால், அது புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும். எனவே இந்திய முதலீட்டாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது இத்தகைய காலக்கட்டத்தில் அவசியமாகியுள்ளது.
முக்கியமான பங்கு முதலீட்டு பார்மூலா:
1. பயத்தை தவிர்க்கவும்:
போர், உள்நாட்டு கலவரம், மக்கள் புரட்சி போன்ற புவிசார் அரசியல் பிரச்சனைகள் பொதுவாகவே பங்குச்சந்தையில் சரிவை உருவாக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இந்த சரிவில் இருந்து அனைத்து பங்குச்சந்தைகளும் மீள்கின்றன. இதனால் போரினால் பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டு மதிப்பு சரிந்தால், உங்கள் முதலீடுகளை பயப்பட்டு உடனே விற்க வேண்டாம். இக்கட்டான சூழ்நிலையில் நிதி இலக்குகளை அடைய பணம் தேவையெனில் நீங்கள் பங்குகளை விற்பனை செய்து பணமாக்கலாம். ஆனால் போரின் காரணமாக ஏற்படும் திடீர் சரிவு காரணமாக பங்குகளை விற்க வேண்டாம்.
இக்காலக்கட்டத்தில் நீங்க செய்ய வேண்டியது சந்தை சரிவுகளை பயன்படுத்தி, மலிவு விலையில் பங்குகளையும், மியூச்சுவல் ஃபண்டுகளிலும் கூடுதலாக முதலீடு செய்யலாம். இத்தகைய காலக்கட்டம் தான் உங்க போர்ட்போலியோவில் சரிவில் தத்தளிக்கும் பங்குகளை கூடிதலாக வாங்கி Average செய்யலாம்.
2. SIP முதலீடு:
2021ல் இருந்து இந்தியா சுற்றியிருக்கும் நாடுகளில் மட்டும் அல்லாமல் உலகளவில் போர், போராட்டம், ஆட்சி மாற்றம் மூலம் பங்குச்சந்தைகள் அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய தடுமாற்றத்தை சமாளிக்க நமக்கு கொடுக்கும் ஒரு முதலீட்டு வாய்ப்பு தான் இந்த எஸ்ஐபி.
ஒரே முறையில் பெரிய தொகை முதலீடு செய்வதை விட, SIP மூலம் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது சிறந்தது. SIP முதலீடுகள் பங்குச்சந்தையில் ஏற்படும் திடீர் சரிவுகளில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. ஆனால் இதில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமானால் இது நீண்ட கால நிதி இலக்குகளுக்கு (7-10 ஆண்டுகள்) உகந்தது, இது உங்கள் பணத்தை பன்மடங்காக்க உதவுகிறது.

இது ஆர்பிஐ ஏப்ரல் 2025 புல்லட்டினில் வெளியிட்ட தரவு
3. மைய மற்றும் உப முதலீட்டு அணுகுமுறை:
வெற்றிகரமான முதலீட்டாளர்கள் பின்பற்றும் Core மற்றும் Satellite உத்தியை பயன்படுத்தவும்:
மைய முதலீடு- Core Investment (65-70%): நிலையான மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்ற லார்ஜ் கேப் ஃபண்டுகள், ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகள், மற்றும் Value/Contra ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். இந்த முதலீடுகள் அனைத்திற்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதலீட்டு காலம் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உப முதலீடு - Satellite Investment (30-35%): உயர் ஆபத்து மற்றும் உயர் வருவாய் திறன் கொண்ட மிட் கேப் ஃபண்டுகள் மற்றும் ஹைப்ரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். இதன் முதலீட்டு காலம் 7-8 ஆண்டுகள் அவசியம்.
இந்த முதலீட்டு முறைகள் மூலம் அவ்வப்போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடக்கும் போர், போராட்டம், ஆட்சி மாற்றம் மூலம் பங்குச்சந்தைகள்,வர்த்தக போர், விதிமுறை முறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் தாக்கத்தை சரி செய்யும். இது Old Style ஆக இருக்கலாம், ஆனால் இது வரலாற்று தரவுகள் படி வெற்றிப்பெற்ற முதலீட்டு முறையாக உள்ளது. நீங்கள் அதிரடியான லாபம் எதிர்பார்ப்பதை விட நிலையான லாபத்தை பெறும் வகையில் முதலீடு செய்தால் நீண்ட கால அடிப்படையில் உங்களுடைய முதலீடு பெரிய அளவில் உயரும்.
4. தங்க முதலீடு:
புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையில், தங்கம் மிகவும் பாதுகாப்பான சொத்தாக விளங்குகிறது. உங்கள் மொத்த முதலீட்டு பொர்ட்ஃபோலியோவில் 15% தொகையை Gold ETF-களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். குறிப்பாக 2021 முதல் புவிசார் அரசியல் பிரச்சனைகள் அதிகரித்துள்ள வேளையில் தங்கம் முக்கியமான சொத்தாக மாறியுள்ளது. இதனால் தங்கம் உங்கள் போர்போலியோவுக்கு பக்கபலமாக எப்போதும் இருக்கும்.

போர் காலத்தில் வளரும் நாட்டின் பங்குச்சந்தையில் ஏற்படும் மாற்றம் குறித்து IMF வெளியிட்டுள்ள தரவு.
அவசர நிதி:
முதலீடு எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், தனிநபர் நிதி நிலையை முதலில் பலப்படுத்த வேண்டும். ஆமாம் உங்களுடைய முதலீட்டு பயணம் சீராகவும், சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்றால் உங்களுடைய தனிநபர் நிதி களஞ்சியம் வலிமையாக இருக்க வேண்டும்.
முதலில் 6 முதல் 18 மாதங்களுக்கான மாதாந்திர செலவுகளுக்கான (கடன் EMI உட்பட) தொகையை சேமித்து முதலில் அதை சிறந்த லிக்விட் ஃபண்டுகள் அல்லது சேமிப்பு வங்கி கணக்குகளில் வைக்கப்பட வேண்டும். இது எதிர்பாராத நெருக்கடிகளில் உங்கள் முதலீடுகளை உடைப்பதை தடுக்கும்.
இந்திய முதலீட்டாளர்களுக்கு அட்வைஸ்:
இந்திய பங்குச் சந்தை, உலகளாவிய புவிசார் அரசியல் அபாயங்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை என்பதால் முதலீட்டாளர்களுக்கு இது சிறப்பான முதலீட்டு உக்தியாக இருக்கும். நீண்ட கால முதலீட்டு அணுகுமுறையை பின்பற்றி உங்க முதலீட்டை மேம்படுத்துங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications