சென்னை: ஜெர்மனியை சேர்ந்த XeedQ என்ற நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் குவாண்டம் தகவல் தொழில்நுட்ப மையங்களை அமைக்க இருக்கிறது . இதற்காக இந்த நிறுவனம் தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. குவாண்டம் தகவல் தொழில்நுட்ப மையங்கள் அமைந்தால் இந்தியாவில் அமேசான் வெப் சர்விஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்த துறையில் கால் பதிக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனமாக XeedQ இருக்கும்.
ஏற்கனவே அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்துடன் இணைந்து குவாண்டம் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன் லேப் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் இருக்கும் இளைஞர்களுக்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் பயிற்சி அளிப்பதே தங்களுடைய நோக்கம் என XeedQ நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் கோபி பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா அரசுகளிடம் பாசிட்டிவான முறையில் பேச்சுவார்த்தை முடிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். மத்திய அரசு இந்தியாவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் முறையை ஊக்குவிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக தேசிய குவாண்டம் மிசின் என்ற ஒரு திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 6000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் 50 முதல் 1000 physical qubits திறன் கொண்ட குவாண்டம் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன.
குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது அடுத்த தலைமுறை கம்ப்யூட்டிங் தொழில்நுட்பமாகும். இது தற்போது இருக்கும் கம்ப்யூட்டர் டெக்னாலஜிகளை விட வேகமாகவும், திறமையாகவும் பாதுகாப்புடனும் செயல்படும் தன்மை கொண்டதாக இருக்கும்.
தற்போது இந்தியாவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் பிரிவில் உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதன் மூலம் சர்வதேச அளவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் இந்தியா முன்னணி இடத்தை பிடிக்கும் என பாலசுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த நிறுவனம் XQ1 என்ற பெயரில் ஒரு multi-qubit processor தயாரித்துள்ளது. இது மிகச்சிறந்த வகையில் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக இந்த ரியல் குவாண்டம் கம்ப்யூட்டிங் முறை குவாண்டம் அல்காரிதம் , குவாண்டம் செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, நிதி நுட்பங்கள், மருத்துவத் துறை என பல்வேறு துறைகளிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது ஐஐடி மெட்ராஸில் குவாண்டம் இன்பர்மேஷனுக்கான ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. அடுத்ததாக பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் குவாண்டம் டெக்னாலஜி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications