அமெரிக்க அரசு ஹெச்1பி விசா மீது கட்டணங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்து கதவுகளை மூடிய நிலையில், உலக நாடுகள் அடுத்தடுத்து இந்திய டெக் வல்லுனர்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்க டெக் துறையுடன் போட்டிப்போட முடியாமல் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் வேளையில் தற்போது ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் தனது முயற்சிகளை துவங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் உற்பத்தி, ஆட்டோமொபைல் மற்றும் கிரீன் எனர்ஜி துறையில் கிங்மேக்கராக இருந்தாலும் டெக் சேவையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இணையாக வளர முடியவில்லை என்பதே நிதர்ணசம். இத்தகைய சூழ்நிலையில் டிரம்ப் போட்ட முட்டுக்கட்டையை வெற்றி படிக்கட்டாக மாற்றி வருகிறது ஐரோப்பிய நாடுகள்.

ஜெர்மனியின் அழைப்பு
இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மன், X தளத்தில் வெளியிட்ட பதிவில், "உயர் திறமை கொண்ட இந்தியர்களுக்கு அழைப்பு. ஜெர்மனி நாட்டின் நிலையான மைக்ரேஷன் கொள்கைகள் மூலம் இந்திய டெக் நிபுணர்கள் ஐடி, மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனியில் இந்தியர்களின் நிலை
ஜெர்மனியில் பணியாற்றும் இந்தியர்கள், உயர் வருமானம் பெறும் குழுவில் முதன்மையான இடத்தில் உள்ளனர் என பிலிப் அக்கர்மன் தெரிவித்தார். இந்திய தொழில்துறை வல்லுநர்கள், தங்களுடைய திறமையால் ஜெர்மன் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகள்
ஐரோப்பாவில் ஜெர்மனி மட்டுமின்றி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளும் வெளிநாட்டு மாணவர்களையும், திறமையான தொழிலாளர்களையும் ஈர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சமீபத்தில் இங்கிலாந்து, தனது குடியுறவு கொள்கைகளை மாற்றி அமைக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது, ஆனால் இது இந்திய டெக் வல்லுனர்களுக்கு போதிய வாய்ப்புகளை வழங்காது எனக் கருதப்படுகிறது. இருப்பினும், இங்கிலாந்தின் முயற்சிகளை பின்பற்றி மற்ற ஐரோப்பிய நாடுகள் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்க்க முயற்சிக்கலாம்.
ஐரோப்பிய நாடுகளின் இந்த முயற்சி இந்திய நிறுவனங்களுக்கு தனது வர்த்தகத்தை ஐரோப்பாவில் விரிவாக்கம் செய்ய பெரிய அளவில் உதவும். இதன் மூலம் அமெரிக்காவில் இழக்கும் வர்த்தகத்தை ஐரோப்பாவில் ஈடு செய்யும் வாய்ப்பை வழங்கும்.
மேலும் அமெரிக்காவில் வேலை, வாழ்க்கை, செட்டிலாக வேண்டும் என துடிக்கும் இந்திய டெக் ஊழியர்களுக்கு ஐரோப்பாவில் தங்களுடைய கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications